சிதாரையும், சாரங்கியையும் இணைத்தால் கிடைக்கக் கூடிய அருமையான ஃபியூஷன் இசைக்கருவியே தில்ருபா, மேலும் நுணுக்கமாகச் சொல்வதென்றால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை உள்ளிட்ட அபூர்வமான இசைக்கருவிகளுடன் நெருங்கிய தொடர்புடையது தில்ருபா இசை.
அவற்றிலிருந்து பிறக்கும் இசையும் தில்ருபாவில் இருந்து பெறும் இசையைப் போலவே தான் இருக்கும்.
ஆனால் , தில்ருபாவில் இருந்து பிரவகிக்கும் இசையில் கிடைக்கக் கூடிய அதி நுட்பமான சோக உணர்வு ஒன்று மட்டுமே பிற இசைக்கருவிகளில் இருந்து தில்ருபாவை வித்யாசப்படுத்திக் காட்டக்கூடியது எனலாம்.
அதனால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை இசைக்கத் தெரிந்த கலைஞர்கள் தில்ருபாவையும் எளிதாகக் கையாளலாம்.
தில்ருபாவின் கழுத்துப் பகுதியில் 18 நரம்புக் கம்பிகள் தொகுக்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட சிதாரைப் போலவே தான் இதையும் இசைக்க வேண்டும்!
தில்ருபா வடமேற்கு இந்தியப் பகுதிகளில் மிகப் பிரபலமான இசைக்கருவியாக விளங்குகிறது. குறிப்பாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தில்ருபா இசை அதிகமும் பயன்பாட்டில் இருக்கிறது/
தமிழகத்தில் தில்ருபா இசைக்கக் கூடிய ஒரே ஒரு பெண் கலைஞர் என்றால் அவர் சரோஜா மட்டும் தான்.
இவர் பிரபல சாரங்கி இசைக்கலைஞரான மனோன்மணியின் தாயார். தமிழில் பல திரைப்படங்களுக்கு இவரது தில்ருபா இசையை ராஜா முதல் ரஹ்மான் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கேள்வி!
அவர் தில்ருபா இசைக்கும் வீடியோ காட்சி இதோ…