Notice: Function add_theme_support( 'html5' ) was called incorrectly. You need to pass an array of types. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 3.6.1.) in /home7/ilakkiyainfo/public_html/wp-includes/functions.php on line 6078
ரணிலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம்: சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு!!; | ilakkiyainfo
Site icon ilakkiyainfo

ரணிலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம்: சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு!!;

பிரதமர் ரணில் விக்ரமசங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டதாக, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பாவக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்து கொண்ட ஒப்பந்தக்கடிதத்தின் மூலப்பிரதிகளையும் மக்கள் மத்தியில் காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றத்தில் தனக்கு உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்ட போது அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தருமாறு கோரி, எமது கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சத்திரனும் நானும் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாகவும் அதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால் அந்த சந்திப்பின் உண்மை தன்மையினை தற்போது வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

அதாவது நாம் இதன்போது அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், காணி விடுவிப்பு, காணாமல்போனோர் ஆகிய விடயங்கள் உள்ளடக்கிய சில கோரிக்கைகளையே பிரதமருக்கு எழுத்து மூலமாக முன்வைத்தோம்.

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் உடன்பட்டதுடன், எழுத்து மூலமாக கையெழுத்திட்டு ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளார்.

நாம் வெறுமனே பிரதமருக்கு ஆதரவளிக்கவில்லை. எழுத்துமூல உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவினை வழங்கியுள்ளோம்.

ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தனும் 3 வரவு செலவுத் திட்டத்துக்கும் ஆதரவளிக்க எவ்வித எழுத்து மூல ஒப்பந்தத்தையும் செய்ய முடியாதுள்ளது.

இதற்கு காரணம் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதால் எதனையும் கோர முடியாதவர்களாக உள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக உரையாற்ற வேண்டாமென எம்மிடம் சம்பந்தன் தெரிவித்தார். ஏன் இவ்வாறு அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது ஆச்சரியமாகவுள்ளது.

ஒரு தனி மனிதனாகிய என்னால் ரணில் விக்கிரமசிங்கவுடன் நிபந்தனை போட முடியுமாக இருந்தால் 15 பேராக உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மக்களுக்காக எவ்வளவு விடயங்களை மேற்கொள்ள முடியும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version