Notice: Function add_theme_support( 'html5' ) was called incorrectly. You need to pass an array of types. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 3.6.1.) in /home7/ilakkiyainfo/public_html/wp-includes/functions.php on line 6078
“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்!!: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி) | ilakkiyainfo
ilakkiyainfo

“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்!!: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ரூபவ் மாநில பொதுச்செயலாளர் பதவிகளை வகித்தவரும் தேசிய குழு உறுப்பனருமா தா.பாண்டியன்  அளித்த விசேட செவ்வி வருமாறு,

கேள்வி:- தமிழகத்தில் திரைப்படத்துறையின் பிரபல்யங்கள் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அரசியலில் பிரவேசிப்பதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- திரைப்பட நடிகர்கள் வருகை தருவதையும் பேசுவதையும் பார்வையிடுவதற்கு ஒரு கூட்டம் கூடுவது வழமையானது. ஊடகங்களும் அவர்களுக்கான முக்கியத்துவத்தினை அளிக்கும்.

ஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்குகளால் ஆதரவளிப்பார்களா என்றால் இல்லை. எனினும் எம்.ஜி.ஆர் விடயம் முழுமையாக மாறுபட்டது.

எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால் அவர் நடிகர் என்பதை தாண்டி இளமைக் காலம் முதல் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சதாரண உறுப்பினராக இருந்தவர். அதனையடுத்து ஏனைய தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்.

அதேசமயத்தில் திரைப்படத்துறையில் சிறப்புப் பெறுகின்றார் என்பதால் மக்களை ஈர்க்கும் நபராக திராவிட முன்னேற்றக்கழகத்தால் அவர் மதிக்கப்பட்டதோடு அக்கழகம் அவரைப் பயன்படுத்தியது.

மேலும் தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர்.பிளவடையும் போது கூட சரியரைவாசியாகவே பிளவு ஏற்படுகின்றது. ஆகவே அவருடைய முன்னுதாரணத்தினை வைத்துப் பார்க்கின்றபோது தற்போதுள்ள சினிமாத்துறையினரின் வருகையை அத்துணை தூரம் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று முன்னிலைப்படுத்தி சிந்திக்க முடியாது.

கேள்வி:- ராஜீவுடன் நெருங்கிப் பழகியவர் என்ற அடிப்படையில் தமிழர்கள் பிரச்சினை தொடர்பில் அவரின் மனநிலை எவ்வாறு இருந்தது?

பதில்:- ராஜீவ் காந்தியை நேரில் பார்த்து அவருடன் பழகியவன் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்கின்றேன். தமிழ் மக்களை மிகவும் நேசித்த ஒருவர்.

குறிப்பாக ரூடவ்ழத்தமிழர்களுக்கு முழுமையான உரிமைகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். ஆனாலும் இந்தியா என்பது ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இத்தகைய விடயங்களை இலங்கை போன்ற பிறிதொரு நாட்டுடன் கையாளும் போது படிப்படியாகவே கையாள முடியும்.

ஆயுதம் ஏந்தி போராடிவிட முடியாது. உலக சூழலில் அது சாத்தியமாகது என்பதையும் உணர்ந்திருந்தார். ஆகவே தான் ஒப்பந்தத்தினை செய்தார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் தயாராகவிருந்தார்.

ஆனாலும் விடுதலைப்புலிகள் தவறான அபிப்பிராயத்தினை உணர்ச்சிவசப்பட்டு எடுத்துவிட்டார்கள். அதாவது, பங்களாதேஷுக்கு இந்திய படைகள் சென்று போரிடவில்லை.

இந்தியபடைகள் சென்று மீண்டும் திரும்பியிருந்தன. ஆனால் இந்தியா உதவிகளை வழங்கியிருந்தது. இதனை விடுதலைப்புலிகள் புரியாது நேச சக்தியை எதிரி சக்தியாக மாற்றிவிட்டார்கள்.

கேள்வி:- ராஜீவ் காந்தி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் என்ற வகையிலும் நேரடியாக களத்தில் இருந்தவர் என்ற அடிப்படையிலும் அதனைப் பற்றி குறிப்பிடமுடியுமா?

பதில்:- 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி ஸ்ரீபெரம்பத்தூரில் அந்த சம்பவம் நடைபெற்றது. இப்போது நினைவுக்கு வந்தாலும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகவே உள்ளது.

சம்பவம் நிகழ்வதற்கு சற்று முன்னர் அவருடன் உரையாடக் கிடைத்தது. அந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது உயிர் தப்பிய ஒரு நபராக நான் மட்டுமே உள்ளேன்.

எனது உடலில் இன்றும் இருபதற்கும் மேற்பட்ட பதிந்த பரளைகள் எடுக்கப்படாதிருக்கின்றன. ராஜீவ் காந்தியின் மெய்க்காப்பாளர்கள் உட்பட என்னைச்சுற்றி நின்றவர்கள் இருபதற்கும் மேற்பட்டவர்கள் அதேயிடத்தில் கொல்லப்பட்டார்கள்.

நானும் படுகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் பலமாத சிகிச்சையின் பின்னர் தான் எழுந்திருந்தேன். அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலும் ஒருதடவை நீடித்திருந்தேன்.

ஆனால் தற்போது வரையில் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் யார்? அதற்கு பின்னால் நடைபெற்ற உண்மையான சதி என்ன? யாரெல்லாம் அந்தத் துயரச்சம்பவத்தின் பங்காளிகள்? என்பதில் உண்மையான தகவல்கள் வெளிவரவில்லை.

அனைத்துமே யூகச் செய்திகளாகவும் சந்தேகச் செய்திகளாகவுமே இருக்கின்றன. இது சம்பந்தமாக ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் என்றொரு புத்தகம் கூட எழுதியுள்ளேன்.

கேள்வி:- ராஜீவின் மரணத்தின் தமிழர்கள் விடயத்தில் இந்திய மத்திய அரசின் போக்கு மாற்றமடைந்தமையை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்னர் இந்திய மத்திய அரசு மட்டுமல்ல முழு இந்தியர்களின் மனநிலையும் விடுதலைப்புலிகள் தொடர்பில் மாற்றமடைந்தது மட்டுமல்ல தமிழர்களின் பிரச்சினைகளிலிருந்தும் விலகிப்போகின்ற நிலைமையினை ஏற்படுத்தியது.

அந்தகாலப்பகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். ராஜீவின் மரணத்தின் பின்னர் இந்தியப் பிரதமராக நரசிம்மராவ் பதவிக்கு வருகின்றார்.

அவர் பதவியை ஏற்றவுடன் ராஜீவின் கொலைசம்பந்தமான விசாரணையில் அவர்கள் பெரிதாக அக்கறையைக் கொண்டிருக்கவில்லை. கொலை சம்பந்தமான துப்பறிதலை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதில் அவர்கள் ஈடுபாட்டுடன் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்பதை அவதானிக்க முடியவில்லை.

ஏனோதானே என்றுதான் அனைத்தையும் முன்னெடுத்தார்கள். அடுத்தாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் அந்தப் படுகொலையை செய்தது என்று உறுதியாக நம்பிவிட்டார்கள்.

அமிர்தலிங்கம், மற்றும் சகோதர இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோரை படுகொலை செய்தார்கள் என தொடர்ச்சியாக கிடைத்த செய்திகள் விடுதலைப்புலிகள் சதிசெய்து கொலைசெய்திருக்க முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை எடுப்பதற்கு காரணமாகிவிட்டது.

அதேநேரம் தமிழகத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறியவர்களும் அக்காலத்தில் பெரும் பிரசாரத்தினைச் செய்தார்கள்.

அதாவது, தமிழ் மக்களை கொல்வதற்கு  இந்திய படைகளை அனுப்பியவர் ராஜீவ் காந்தி ஆகவே அவரை மரணமடையச் செய்தது சரிதான் என்று பகிரங்க கருத்துக்களை வெளியிட்டார்கள்.

இவற்றின் மூலம் ராஜீவ் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் தான் மூல காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது போன்று மக்கள் மத்தியிலும் சென்றடைந்து விட்டது. இதனால் மத்திய அரசாங்கம் முதல் தமிழக அரசாங்கம், பொது மக்கள் என அனைத்து தரப்பினரிடையேயும் விடுதலைப்புலிகள் தொடர்பிலான மனநிலை மாற்றமடைந்தது.

கேள்வி:- தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- மண் விடுதலைக்காக விடுதலைப்புலிகள் முன்னெடுத்த போராட்டத்தினை நான் மதிக்கின்றேன். ஆனால் அவர்களின் சகோதரப்படுகொலைகளை வன்மையாக கண்டிக்கின்றேன். அப்படியொரு சம்பவத்தினை நேரடியாகவே பார்த்திருந்தேன். சென்னை நகரின் மத்தியில் பத்மநாபா உட்பட 12பேரை பட்டப்பகலில் சுட்டுக்கொன்றார்கள்.

அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்று அந்த உடலங்களை எனது தோளில் காவிச்சென்று இறுதிக் கிரியைகளில் ஈடுபட்ட அனுபவம் எனக்கு உள்ளது.

அரசியலில் வேறுபாடுகள் முரண்பாடுகள் இருப்பதற்காக துப்பாக்கிகலாசராத்தினை பயன்படுத்தும் வழக்கம் தமிழக அரசியலில் இருக்கவில்லை. தமிழர்களைக் கொன்றுவிட்டு தமிழ்த் துரோகி என்று அறிவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது.

அவர்களிடத்தில் வீரம் செறிந்திருந்தது. போராட்டத்தில் சிறந்து விளங்கினார்கள். அடுத்து வந்த காலகட்டத்தில் ஆனால் அரசியல் முதிர்ச்சி இன்மை காரணமாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டார்கள். அது அவர்களுக்கு பெரும் பலவீனத்தினை அளித்தது.

கேள்வி:- தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இத்தகைய விமர்சனங்களை முன்வைக்கும் நீங்கள் அவர்களுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தீர்களே?

பதில்:- இந்த விமர்சனங்களுக்கு அப்பால் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தினை அவர்கள் முன்னெடுத்தமையினால் நான் அவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவ வேண்டிய கடப்பாட்டிற்கு உட்பட்டிருந்தேன்.

20120710-BalasinghamNadesan

கேள்வி:- நான்காம் ஈழப்போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்புகள் காணப்பட்டதாக தகவல்கள் உள்ளனவே?

பதில்:- நான்காம் ஈழப்போரின் போது எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்பாடல்கள் இருந்தமை உண்மை தான். விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் என்னுடன் தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டிருந்தார்.

சில அறிக்கைகள் வரைகின்றபோது அவர் என்னுடன் கலந்துரையாடுவார். அதுதொடர்பிலான ஆதாரங்களும் என்னிடத்தில் உண்டு. இவ்வாறான நேரத்தில் தான் நடேசன் தங்களை சரணடையுமாறு கோருகின்றார்கள்.

என்ன செய்வது என்பது குறித்தும் என்னிடத்தில் ஆலோசனை நடத்தினார். உங்களின் நெருக்கடியான நிலைமைகளை அறியாது நான் தீர்க்கமாக பதிலளிக்க முடியாது என்றேன்.

இருப்பினும் சரணடைகின்றேன் என்று எழுத்துமூலமாக வழங்காது எமது ஆயுதங்கள் மௌமாகின்றன என்று எழுத்துமூலமாக வழங்குங்கள் என்று ஆலோசனை வழங்கினேன். அதனை அறிக்கை வரைபாக அனுப்புமாறும் கோரினார்.

அச்சமயத்தில் நான் அனுப்பி வைத்தேன். அதனைத்தொடர்ந்து ஒரிரு நாட்களின் பின்னர் “தான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என்றும் நடசேன் கூறினார்.

“நடுவழியில் என்னையும் வாகனத்தையும் மறித்துவிட்டார்கள். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை” என்பது நடேசன் இறுதியாக என்னுடன் பேசிய வார்த்தைகளாக இருக்கின்றன.

இதனைவிட பலபோராளிகளும் மக்களும் ஊர்பெயர் சொல்லாது நெருக்கடிகளிலிருந்து காப்பற்றுவீர்களா? அடுத்து என்ன செய்யலாம்? நாங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளோம். எப்படி உயிரைக்காப்பாற்றுவது? போன்ற கேள்விகளுடன் என்னைத் தொடர்புகொண்டார்கள். அச்சமயத்தில் போர்க்கள சத்தத்தினையே என்னால் கேட்கக்சுகூடியதாக இருந்தது.

கேள்வி:- இலங்கை தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுக்கு நீங்கள் எவ்வாறான பரிந்துரையை முன்வைக்கின்றீர்கள்?

பதில்:- உலகத்தினை எடுத்துக்கொண்டால் பலகோடிப்பேரா அல்லது சில்லாயிரம் பேரா என்பதை தாண்டி சிந்தனைகள் காணப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்கரை இலட்சம் மக்களைக் கொண்ட மொல்டா தனிநாடாக இருக்கின்றது. ஸ்பெயின் நாட்டில் கட்டலோனியா தனியாக பிரிய வேண்டும் என்கின்றார்கள். உலகத்தினை அடக்கி ஆண்ட இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது. ஸ்கொட்லாந்து தனியாக பிரிவதற்கும் கோசங்கள் எழுந்திருந்தன.

அவ்வாறு பார்க்கின்றபோது உலகெங்கும் பரந்து ரூடவ்ழத்தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக கோடிகளில் உள்ளது. ஆகவே அவர்களுக்கென்றொரு தனி அலகில் ஆட்சி இருப்பதில் தவறில்லை.

தனிநாடு வழங்குவதற்கு தயார் இல்லையென்றால் ஆகக்குறைந்தது மாநில சுயாட்சியுடன் கூடிய அதிகாரப்பகிர்வினை வழங்க வேண்டும்.

சிங்கள மக்களுக்கு எத்தகைய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவோ அவை அனைத்தும் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதத்தினை அங்குள்ள ஆட்சியாளர்கள் வழங்கவேண்டியது அவசியமாகின்றது.

இந்தியாவிலே மாநிலங்களுக்கான அதிகாரங்கள் தொடர்பில் பஞ்சாயத்து நடகின்ற நிலையில் இந்த முறைமையை விடவும் குறைவாக தமிழர்கள் பகுதியில் நடத்துவதற்கு முயல்வது பொருத்தமல்ல. தமது பூர்வீக பகுதிகள் தொடர்பில் திட்டமிடுவதற்கும் வரிபோடுவதற்கும் உரிமையில்லை என்றால் என்ன செய்வது. ஆகவே இத்தகைய அடிமைத்தனமான நிலைமை எங்கும் ஏற்படக்கூடாது.

இலங்கை தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் சேர்த்தால் பத்துக்கோடியை தண்டுகிறது எண்ணிக்கை. ஆனால் அந்த இனத்திற்கென்று ஒரு நாடில்லை. எட்டுக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஜேர்மனி வல்லரசாக இருக்கையில் இத்தனை கோடியைக் கொண்ட தமிழினத்திற்கு மாநிலம் தான் இருக்க வேண்டும் என்பது எந்தவகையில் நியாயம். இது பிரிவைக்கான சிந்தனை அல்ல. உரிமைக்கான சிந்தனையின் பால் உருவான முழக்கம்.

கேள்வி:- தற்போதைய சூழலில் உலகமயமாதல் கொள்கையின் அபரீதமான போக்கால் இடதுசாரிக் கொள்கைகள் பின்னடைவைச் சந்திக்கின்றனவா?

பதில்:- உலகமயமாதல் கொள்கையால் வல்லரசான அமெரிக்காவே நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரெம் கூறுகின்றார். பொருளாதார ரீதியாக அவரால் சீன நாட்டுடன் போட்டியிட முடியவில்லை.

சீன நாட்டுக்கு கிடைத்துள்ள மக்கள் தொகை தொழில்துறை என்பன பெரும்பலமாக அமைந்துள்ளதோடு அந்நாடு தொடர்ச்சியாக முன்னோக்கிச் செல்வதற்கான பதையையும் அமைத்துவிட்டது. அமெரிக்க தன்னிலையைக் காப்பாற்றவே தத்தளிக்கின்றது.

உலகம் முழுவதிலும் முதலாளித்துவ பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கின்றது. பல்வேறுநாடுகளில் வங்கிகளில் மோசடிகள் இடம்பெறுகின்றன. கறுப்புபண தூய்தாய்க்கல் நடைபெறுகின்றது.

இவையெல்லாம் முதாலாளித்துவத்தின் கடைசிக்காலத்தினை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆகவே உலகப்போக்கு முற்றாக மாறியுள்ளது.

மேலும் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்த ஆரம்பிக்கின்றபோது ஏகாதிபத்தியமாகவே உலகத்தினையே அடக்கி ஆண்டது. இதனால் இங்கிலாந்திலேயே 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. தற்போது இங்கிலாந்தின் நிலைமையை அறிவதற்கு நல்லதொரு உதாரணம் உலகப்பெரும் விஞ்ஞானி ஸ்டீபன்ஹார்கிங்கின் மரணம்.

இறுதிவரையில் விஞ்ஞான முடிவுகளை மட்டும் நம்பிய இவர் இறந்த பின்னர் தேவாலயத்தின் கல்லறையில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த காலத்தில் எதிர்கருத்துக்களை உடவர்களின் உடலங்களை தேவாலயத்தின் கல்லறையில் அடக்கம் செய்யவதற்கு கூட ஆட்சியாளர்கள் விடமாட்டார்கள். இதன் அடிப்படையில் தான் மார்க்ஸ், வால்டர், கலிலியோ போன்றவர்களுக்கு தடைகள் இடப்பட்டன.

ஆனால் ஸ்டீபன் ஹார்க்கிங்கின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டதோடு இங்கிலாந்தில் நாதியற்றவர்களாக ஏழைகளாக இருப்பவர்களுக்கு முழு உணவு வழங்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்திற்கு அமைய நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது. அதில் நூற்றுக்கணக்கான ஏழைகள், நாதியற்றவர்கள் பங்கேற்றனர்.

உலகத்தின் அத்தனை செல்வத்தையும் சுரண்டிக் கொழுத்த அந்த நாட்டில் இத்தனை ஏழையகளா? நாதியற்றவர்களா? ஏன்ற வினா எழுகின்றது. அத்துடன் முதலாளித்துவம் ஏழைகளையும் நாதியற்றவர்களையும் தான் உருவாக்கும் என்பதும் வெளிப்படுகின்றது. இவ்வாறு இயற்கையையும் சமுகத்தினையும் அளித்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கு வருங்காலம் இல்லை. இடதுசாரிகள் விஞ்ஞான தொழில்புரட்சி ஏற்பட்டபோது கொள்கைரீதியான ஆயுத்தினை பயன்படுத்தவில்லை.

மார்சிய தத்துவமோ மனித குலம் முன்னேற வேண்டும் என்கிற இடதுசாரித் தத்துவமோ சாகவில்லை. உலகத்தின் எதிர்காலத்திற்கு அதுவே காரணமாக அமையும்.

(செய்தி மூலம்: தா.பாண்டியன்  வீரகேசரி  இணையத்தளத்துக்கு அளித்த விசேட செவ்வி)

– நேர்காணல்:- ஆர்.ராம்

Exit mobile version