ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    சினிமா

    `ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது… இப்போ..?!’’ – `எங்க வீட்டு மாப்பிள்ளை’ சீதாலட்சுமி

    AdminBy AdminMay 16, 2018No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ` `எங்க வீட்டு மாப்பிள்ளை’தான் நான் கலந்துக்கிட்ட முதல் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும் ரொம்ப புதுசா இருந்துச்சு. இதுல என்ன இருக்குனு ஆர்வத்தோட கலந்துக்கப் போனேன்..” எனப் படபடவென பேச ஆரம்பிக்கிறார் சீதாலட்சுமி.

    30221521_1120961054711997_4270203530278137256_n_15319

    `எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோவோட ஃபைனல்ல ஆர்யா அந்த முடிவைச் சொன்னதும் உங்களுக்கு எப்படி இருந்தது..?

    “ஃபைனல் அப்போ அவர் கையில் டோக்கன் ஆஃப் லவ் ரிங் வச்சிருந்ததை பார்த்தப்போது, வின்னர் பெயரைச் சொல்லப்போறாருனு நினைச்சுட்டு இருந்தோம்.

    ஆனால், அவர் எதுவும் சொல்லாம, `நன்றி, வணக்கம்’னு சொன்னதும் எனக்கு செம ஷாக். முதலில் இது ப்ராக்கா இருக்குமோனு நினைச்சேன்.

    அப்புறம்தான் தெரிஞ்சது இதுதான் உண்மைனு. இது வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான முடிவா இருந்தனால, இதை பெர்ஷனலா கொண்டு போகலாம்னு நினைச்சிருப்பார் போல. ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது. இப்போ நியாயமா படுது.’’

    ஒரு போட்டியாளரா ஆர்யாவோட முடிவு சரினு சொல்றீங்க… நீங்க ஆடியன்ஸா இருந்தா இந்த முடிவு சரினு சொல்லுவீங்களா..?

    “ஆடியன்ஸுக்கு இது ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவங்களும் யோசிச்சுப் பார்த்தா இது நியாயம்னு தோணும்.’’

    இந்த நிகழ்ச்சி முடிஞ்சதுக்குப் பிறகு உங்க வீட்டுல என்ன சொன்னாங்க..?

    “அவங்க என்ன நினைப்பாங்கனு எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ஆனால், ஃபைனல் அப்போ எங்க ஃபேமிலி என்னை விட்டுக்கொடுக்காம என்கூடவே இருந்தாங்க.

    ரிசல்ட் நெகட்டிவ்வா வந்தா நான் ஃபீல் பண்ணக்கூடாதுனு நினைச்சாங்க. வின் பண்ணலைனா அழக் கூடாதுனு நானும் நினைச்சிட்டு இருந்தேன்.

    இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் என்னோட வெற்றி, தோல்விகளில் எங்க ஃபேமிலி எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.’’

    26685299_1070972066377563_5047259944546087533_o_15270

    இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும், இதில் கலந்துக்க எப்படி ஆர்வம் வந்துச்சு..? ஃபேமிலியில் எப்படி ஓகே சொன்னாங்க..?

    “ஜெய்ப்பூருக்கு தனியா போகணும்; அங்கேயே கிட்டத்தட்ட 2 மாதங்கள் இருக்கணும்னு சொன்னதுக்கு, எங்க அப்பா, அம்மா முதலில் ஓகே சொல்லலை.

    நான் எப்படியும் அடம் பிடிச்சுப் போயிடுவேன்னு அவங்களுக்குத் தெரியும். நானும் ,`ரெண்டு, மூணு நாள் எப்படியிருக்குனு பார்த்துட்டு வந்திடுறேன்’னு சொல்லிட்டு போனேன்.

    அங்க போனதும் ஒரு பேலஸ்; ராணி மாதிரி பல்லாக்குல தூங்கிட்டு போனாங்க; பக்கத்துல ஆர்யா; இதெல்லாம் தனி உலகமா இருந்துச்சு.

    எந்த வேலையும் இல்லாம ஆர்யாவை மட்டும் லவ் பண்ணிட்டு இருந்தேன். சில நாள்களில் அவரும் எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ண ஆரம்பிச்சார். சரி இவரை கரெக்ட் பண்ணிடலாம்னு தோணுச்சு.’’

    ஆஃப் த கேமராவின் போது அங்க என்னெல்லாம் நடந்துச்சு..?

    “ஆஃப் த கேமராவின் போது ஆர்யாகிட்ட அதிகமா பேசுனது நான்தான். அதுக்கு அங்க சில பிரச்னைகள் வந்துச்சு.

    எல்லாரும் ஆர்யாகிட்ட ஆஃப் த கேமராவிலதான் அதிகமா பேச ட்ரை பண்ணுவாங்க. அந்த டைம்லதான் அவரைப் பற்றி அதிகமா தெரிஞ்சுக்க முடியும்.

    நாங்க இப்படி ஸ்மார்ட் வொர்க் பண்ணினா ஆர்யாவும் செம ஸ்மார்ட்டா இருப்பார். ஆஃப் த கேமராவில் எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டார். இருந்தாலும் நாங்க விடாம, இதை ஒரு டாஸ்க்கா எடுத்துக்கிட்டு அவரைப் பற்றி தெரிஞ்சுக்க இதெயெல்லாம்தான் ஆஃப் த கேமராவில் ட்ரை பண்ணுவோம்.’’

    டோக்கன் ஆஃப் லவ்வே வாங்காம ஃபைனல் வரைக்கும் போயிருக்கீங்களே..!?

    “டோக்கன் ஆஃப் லவ் முக்கியம் இல்லை; லவ்தான் முக்கியம்னு போயிட்டு இருந்தேன். நான் எப்போதெல்லாம் எலிமினேட் ஆகப்போறேன்னு நினைச்சிப்பேனோ, அப்போதெல்லாம் ஆர்யா என்னைக் காப்பாத்திடுவார். இதை ஜாலியா எடுத்துக்கிட்டு ஃபைனல் வரைக்கும் போயிட்டேன்.’’

    நிகழ்ச்சிக்கு அப்புறமும் ஆர்யாகூட பேசிட்டுத்தான் இருக்கீங்களா..?

    `ஆமாம், பேசிட்டுத்தான் இருக்கோம். இந்த நட்பு எதிர்காலத்துல எப்படி மாறும்னு தெரியலை. பொறுத்திருந்து பார்க்கலாம். ஆர்யா ஓகே சொன்னா கல்யாணம் பண்றதுக்கு நான் ரெடி.’’

    Post Views: 663

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானா

    February 4, 2023

    நாளை வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்.. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்படும்-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

    February 3, 2023

    Leave A Reply Cancel Reply

    May 2018
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Apr   Jun »
    Advertisement
    Latest News

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    தெமட்டகொடையில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    • அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி
    • “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version