மும்பை தெருவில் விலையுயர்ந்த காரில் சென்ற ஒருவர் ஜன்னல் கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசுவதை தனது கணவர் கோலியுடன் வேறொரு காரில் செல்லும் அனுஷ்கா சர்மா பார்த்து விடுகிறார்.
குப்பை வீசிய நபரை கண்டிக்கும் வகையில் திட்டும் அனுஷ்கா, குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுமாறும் அறிவுறுத்துகிறார். இந்த காட்சிகளை அவரது கணவர் விராட் கோலி வீடியோவாக படம் பிடித்து, அந்த 17 வினாடி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது மனைவியின் சமூக உணர்வையும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்த பதிவு வெளியானதும் அனுஷ்காவிடம் திட்டு வாங்கிய நபர் தற்போது எதிர்வினை ஆற்றியுள்ளார். அர்ஹான் சிங் என்னும் அந்நபர் இந்த சம்பவம் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நான் காரில் இருந்து அந்த குப்பையை வேண்டுமென்று தெரிந்தே சாலையில் வீசவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டும் சாலையில் போகும் வழிப்போக்கர்களைப்போல் அனுஷ்கா சர்மா என்னை அநாகரிகமாக திட்டியதை அருகில் இருந்து படம் பிடித்த விராட் கோலி இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனது கார் கண்ணாடி வழியாக வெளியேறிய குப்பையைவிட விராட் கோலி காரில் இருந்து வந்த அனுஷ்காவின் வசைமொழியும், இதை வீடியோ பதிவாக வெளியிட்ட விராட் கோலியின் செயலும் படுகுப்பையாக உள்ளது என அர்ஹான் சிங் குறிப்பிட்டுள்ளார்.
Saw these people throwing garbage on the road & pulled them up rightfully. Travelling in a luxury car and brains gone for a toss. These people will keep our country clean? Yeah right! If you see something wrong happening like this, do the same & spread awareness. @AnushkaSharma pic.twitter.com/p8flrmcnba
— Virat Kohli (@imVkohli) 16 juin 2018