தமிழில் முதல் முறையாகப் பிக் பாஸ் நிகழ்ச்சி 2017இல் துவங்கப்பட்டது. ஓவியா ஆர்மி, ஆர்த்தி அலப்பறை, காயத்ரியின் தூய தமிழ், ஜூலியின் சில்லறை வேலைகள், ஆர்வ்-இன் காட்டப்படாத முத்த காட்சி எனப் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது.
ஓவியா ஆர்மியின் அதிர்வுகள் அடங்குவதற்கு முன்னதாகவே தமிழில் பிக்பாஸ் 2 துவங்கப்பட்ட நிலையில், தூங்கிக்கொண்டு இருக்கும் ஓவியா ரசிகர்களை இழுக்க அறிமுக நிகழ்ச்சியில் ஓவியாவை பிக் பாஸ் வீட்டிற்குள்ள அனுப்பிப் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் ஆண்டவர்.
தமிழ்நாட்டில் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவு செலவுகள் எனப் பேஸ்புக்கில் ஒரு கணக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதைப் பார்த்தால் நீங்க ஆடிப்போயிருவீங்க.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான செலவுகள்
ஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.
நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.
மற்ற 16 பேருக்கு ₹ 42 கோடி
100 நாள் படப்பிடிப்புச் செலவு ₹25 கோடி முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி மொத்த செலவு ₹110 கோடி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வருவாய்
30 வினாடிக்கான விளம்பரத்திற்கு மட்டும் ₹ 25 லட்சம் ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 வினாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி 100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி மொத்த லாபம் ₹ 1140 கோடி