Site icon ilakkiyainfo

உலகின் பழமையான விஸ்கி 20 கோடிக்கு விற்பனை

உலகின் மிகவும் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று  ரூ. 20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் நடைபெற்ற ஏலத்தில் உலகின் மிகவும் பழமையான விஸ்கி புதன்கிழமை ஏலமிடப்பட்டது. இந்த ஏலத்தில் 60 ஆண்டுகள் பழமையான ஒரு விஸ்கி மதுபான பாட்டில்    சுமார் 20 கோடி ரூபாய்க்கு விலை போனது.

இதன் உலகின் மிகவும் அதிக விலைக்கு விற்பனையான விஸ்கி என்ற சாதனையும் படைக்கப்பட்டது. 1926ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விஸ்கி 1986ஆம் ஆண்டு பாட்டிலில் நிரப்பப்பட்டது. அதன் பாட்டிலில் அழகிய கலை வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

மக்கல்லன் வலேரியோ அதாமி என்ற பெயர் கொண்ட இந்த விஸ்கியை ஹோலி கிரெயில் என்று குறிப்பிடுகிறார்கள்.

Exit mobile version