Site icon ilakkiyainfo

கடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…

கடும் விமர்சனத்திற்கு ஆளாகி தனது பிளைப்புக்கே ஆப்பு வைத்துக்கொண்ட விராட் கோலி…!
விளையாட்டு

விராட் கோலியின் விமர்சனத்திற்கு ஆளான பேச்சு ஒன்று சமூக வலைதளத்தில் பரபரப்பாக வெளியாகி வருகின்றது.

இந்திய அணியின் தலைவனின் பேச்சு பிசிசிஐ நிர்வாகிகளுக்கே பிடிக்கவில்லை என்பதே உண்மை.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ‘ரன் மெஷின்’ விராட் கோலிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சிறப்பானதாக அமைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் மிரட்டிவருகிறார். இங்கிலாந்து தொடரில் மற்ற வீரர்கள் திணறியபோதும், துடுப்பாட்டத்தில் சிறந்து காணப்பட்டார்.

மேற்கிந்திய அணிக்கு எதிராக ஹாட்ரிக் சதம், ஒரு நாள் போட்டியில் 10,000 ஓட்டங்கள், அதிவேக சதங்கள் என களத்தில் பட்டையைக்கிளப்புகிறார்.

கோலியைக் கட்டுப்படுத்த முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறிவருகிறார்கள். கோலி தற்போது, அதே வேகத்தை சமூக வலைதளத்தில் காட்டியுள்ளார். ஆனால் இது ரசிக்கும்படியாக இல்லை.

ட்விட்டரில் கோலி வெளியிட்டுள்ள வீடியோவுக்கு கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. ரசிகர் ஒருவரின் கமென்டுக்கு விராட் கோலி பதிலளிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த காணொளியில் அவர், `விராட் கோலியை ரசிகர்கள் வியந்து பார்க்கின்றனர். `விராட் கோலி சிறந்த துடுப்பாட்ட வீரர் தான்.

ஆனால், அவரின் துடுப்பாட்டத்தில் சிறப்பு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்திய துடுப்பாட்ட வீரர்களை காட்டிலும், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் செய்வதை ரசித்துப் பார்ப்பேன்” ஒரு ரசிகரின் கமென்ட் இது. இதை கோலி படித்து முடிக்கிறார்.

அதில் பதிலளிக்கும் கோலி, “ ஓகே! இந்தக் கருத்தை தெரிவித்தவர், இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

இந்தியாவை விட்டு வெளியேறி, வேறு எங்கேயாவது சென்று வசிக்கலாம். உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை;

அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு ஏன் இங்கு வசிக்க வேண்டும். உங்களுக்கான முன்னுரிமை எது என்று நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்” என்று கூறுகிறார். விராட் கோலியின் இந்தப் பதிலுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகிறது. கோலியின் பேச்சை பிசிசிஐ நிர்வாகிகளே விரும்பவில்லை.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியுள்ள பிசிசிஐ பொருளாளர் அனிருத் செளத்ரி, “கிரிக்கெட் ரசிகர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை  விரும்பிப் பார்ப்பேன். அதேசமயம் விவியன் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஸ் ஆட்டத்தையும் ரசிப்பேன்.

டிராவிட், சச்சின், சேவாக் ஆட்டத்தை விரும்புவது போன்றே மார்க் வாஹ், பிரையன் லாராவினையும் ரசிப்பேன்.

என்னைப் பொறுத்தவரை, ஷேன் வார்னே ஒரு பரபரப்பான ஸ்பின்னர். ஆனால் அனில் கும்ப்ளே பந்துவீச்சில் ஒரு த்ரில் இருக்கும்.

அது ஒரு அலாதியான சுகம். நாடு மற்றும் அரசியல் கடந்து கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும்.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். நமது அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மற்ற நாடுகளின் வீரர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு நிர்வாகியோ, “ரசிகர்களை வெளிநாட்டுக்குச் செல்லச் சொல்லும் கோலி, முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படிப் பேசினால், புமா உள்ளிட்ட நிறுவனங்கள் 100 கோடிக்கு அவரை ஒப்பந்தம் செய்யாது. சர்வதேச நிறுவனங்கள் கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறுத்தினால், பிசிசிஐ-யின் வருமானம் வீழ்ச்சியடையும்.

அது, வீரர்களின் ஊதியத்தை பாதிக்கும். கோலி தனது பேச்சின்மூலம் ஒப்பந்தத்தை மீறி உள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். அதேசமயம், சிறந்த மனிதராக முயல வேண்டும்” எனத் தனது அதிருப்தியைக் கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக வசைபாடிவருகின்றனர்.

`2008-ம் ஆண்டில் நீங்கள் சொன்னது நினைவில்லையா கோலி. நீங்களே தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் உங்கள் மனம் கவர்ந்த வீரர் என்று கூறினீர்கள்’ எனச் சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும், `சிலர் உங்கள் திருமணத்தை ஏன் வெளிநாட்டில் செய்துகொண்டீர்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்துகிறீர்கள். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version