Site icon ilakkiyainfo

ஒரு நாள் இரவுக்கு இத்தனை கோடியை செலவு செய்யும் பிரபல நடிகை…!

பொலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த பிரியங்கா தற்போது ஹொலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். அங்கு திரையுலகில் பிரகாசித்தததோடு தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பொப் இசை பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கல்யாண நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இரு மத முறைப்படி நடக்கவிருக்கும் இவர்களுடைய திருமணம் முதலிலும் கத்தோலிக்க முறைப்படியும் பிறகு இந்துமத முறைப்படியும் நடைபெறவுள்ளது.

Umaid Bhawan Palace

மேலும் திருமணம் ஜோத்பூர் உமைத் பவன் (Umaid Bhawan Palace) என்ற அரண்மனையில் நடைபெறவுள்ளதால் அங்கு 64 ஆடம்பர அறைகள் மற்றும்ல் 22 அரண்மனைக்கான அறைகள், 42 suites இருக்கிறதென்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

இதில் இப்போதைக்கு அவர்கள் 40 அறைகளை தெரிவு செய்துள்ளார்களாம். மொத்தமாக ஒரு நாள் இரவுக்கு வாடகை இலங்கை பெறுமதிக்கு இரண்டரை கோடியும் கல்யாண ஜோடிகள் 3 நாளுக்கு வாடகைக்கு வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சாப்பாட்டிற்கு ஒரு நபருக்கு ரூ 50 ஆயிரமாம். இன்னும் லைட்டிங்க்ஸ், டெக்கரேஷன் என செலவுகள் இருக்கிறது என கூறிவருகின்றனர்.

Exit mobile version