பாகிஸ்தானுக்கு ஒரு டொலர் நிதி கூட வழங்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹாலோ கூறியுள்ளார்.

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மாத்திரம் 33 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக் கொண்டு பயங்கரவாதிகளை ஒடுக்க தவறியதன் காரணத்தினாலேயே மேற்கண்ட முடிவினை அமெரிக்கா எடுத்துள்ளது.

இது தொடர்பில் நிக்கி ஹாலே கூறுகையில்,

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு நாம் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர்களை நிதியாக கொடுத்தோம். இதுபோல் 15 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானுக்கு நிதி அளிக்கப்பட்டது. ஒரு பில்லியன் டாலர் என்பது சாதாரண தொகை அல்ல. அதன் மூலம் எத்தனையோ நல்ல செயல்களை செய்ய முடியும்.

மாறாக நாம் வழங்கிய நிதியை வைத்துக்கொண்டு பயங்கரவாதிகளை உருவாக்கி நம்முடைய வீரர்களையே அவர்கள் கொல்கின்றனர். தொடர்ந்து பயங்கரவாதிகளின் கூடாரமாகத்தான் பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது.

எனவே பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை பாரபட்சமின்றி ஒடுக்கும் வரையில் அவர்களுக்கு ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.