ilakkiyainfo

அந்த ஒரு ஹேர்-கட்தான் இந்த சாதனைக்குக் காரணம்!’, கின்னஸில் இடம்பெற்ற இளம்பெண் நிலன்ஷி!

இவரின் தற்போதைய தலைமுடியின் நீளம் 170.5 செ.மீ. இவர் 152.5 செ.மீ  நீளமான தலைமுடியுள்ள அர்ஜென்டினாவைச் சேர்ந்த அப்ரில் லோரின்சாட்டி என்ற இளம்பெண்ணின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

லகிலேயே உயரமான மனிதர்’, `உலகிலேயே மிகப்பெரிய கேரட்’, `உலகிலேயே குட்டையான தம்பதியர்’ என அவ்வப்போது வித்தியாசமான `கின்னஸ்’ சாதனை புரிந்தவர்களை நாம் செய்திகளில் கண்டிருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்.

பெரும்பாலும் அவையெல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் செய்த சாதனையாக இருக்கும்.

ஆனால், சமீபத்தில், குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் நிலன்ஷி படேல் (Nilanshi Patel), வித்தியாசமான ஒரு கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்.

`உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்டவர்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார்.

இந்தக் காலத்து இளம்பெண்கள், விதவிதமாக ஹேர்-கட் செய்துகொள்வதே டிரெண்ட் என்று கருதிக்கொண்டிருக்க, இந்த இளம்பெண்ணுக்கு இப்படி ஒரு சாதனை புரியும் எண்ணம் எப்படி வந்தது என்று அறிந்துகொள்ளும் ஆவலில், அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

IMG-20181226-WA0033_17055

“நான் ஒரு முறை கோவா-க்கு ஃபேமிலியோட டூர் போயிருந்தேன். அப்போ அங்க வந்திருந்த வெளிநாட்டவர்களெல்லாம், என்னுடைய நீளமான தலைமுடி பார்த்துட்டு ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க.

என்னோட போட்டோஸ் எடுத்துக்கணும்னு சொன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்ணும் புரியலை. அப்புறம்தான் நானே செலிபிரடியா மாறிடேனோன்னு தோணுச்சு.

இதைப் பார்த்த என் அப்பா அம்மா என்னைப் பத்தி `லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்’க்கு அனுப்பினாங்க.

இப்போ `கின்னஸ் சாதனையில இடம்பெற்றிருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு! ஆனா, என் தலைமுடி எனக்கு இவ்வளவு பெருமையை கொண்டு வரும்னு நான் நினைக்கலை.

ஸ்கூல்லா என் ஃப்ரெண்ட்ஸ், என்னை `டேங்கில்டு’ (Tangled) படத்துல வர்ற `ரபுன்செல்’னு செல்லமா கலாய்ப்பாங்க” என்றவர் தன் நீளத் தலைமுடியின் ரகசியத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

`

`எனக்கு ஆறு வயசு இருக்கும்போது, நானும் எங்க அம்மாவும் ஹேர் கட் பண்ண பார்லருக்குப் போனோம்.

அம்மா ஹேர் கட் பண்ணி முடிச்சதும், எனக்கு பண்ணிக்கணும்னு தோணுச்சு. அப்படியே பண்ணிக்கிட்டேன்.

ஹேர் கட் முடிஞ்சதும் கண்ணாடியில பார்த்தா எனக்கே என் ஹேர் கட் சுத்தமாப் பிடிக்கலை.

`இனி வாழ்க்கையில ஹேர்-கட் என்ற வார்த்தைக்கே இடமில்லை’னு முடிவு பண்ணிட்டேன்!”, என்று கூறி, குழந்தைத்தனமாகச் சிரிக்கிறார் நிலன்ஷி.

இவரின் தற்போதைய தலைமுடியின் நீளம் 170.5 செ.மீ. இவர் 152.5 செ.மீ நீளமான தலைமுடியுள்ள அர்ஜென்டினாவைச் சேர்ந்த அப்ரில் லோரின்சாட்டி என்ற இளம்பெண்ணின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

வடக்கு குஜராத்திலுள்ள மோடாசா என்ற பகுதியைச் சேர்ந்த நிலன்ஷி படேல், பி-கனே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்.

இவர் இத்தாலிக்குச் சென்று விருது வாங்கியதைப் பற்றி நம்மிடம் கூறுகையில், “நான் முதன்முதல்ல ஃப்ளைட்ல போனது என் தலைமுடிக்காகத்தான்.

அப்படியே என் அப்பா அம்மாவையும் ஃப்ளைட்ல கூட்டிட்டுப் போனது கூடுதல் சந்தோஷம். மொத்தம் 5 நாள்கள் அங்க இருந்தோம். ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருந்தது.

பெற்றோருடன் நிலன்ஷி படேல்

கின்னஸ் சாதனைக்காக சர்டிஃபிகேட் வாங்கியதுக்கு அப்புறம், அங்க இருக்கிற இத்தாலி தொலைக்காட்சியில  என்னை இன்டர்வியூ பண்ணாங்க. உண்மையிலேயே  இத்தாலி டிவிக்குப் பேட்டி கொடுப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை”, என்று கூறியவரிடம், “சரி… இவ்வளவு சாதனை படைச்ச உங்க தலைமுடியை எப்படிப் பாராமரிக்கிறங்கனு சொல்லவே இல்லையே?” என்று நாம் கேட்க, “நான் உண்மையிலேயே எந்த ஸ்பெஷல் கேரும் எடுக்கலை.

வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்ச்சு தலைக்குளிப்பேன். அவ்வளவுதான்! மத்தப்படி இது தானா வளர்த்த தலைமுடிதாங்க!”, என்று கூலாகச் சொல்கிறார் நிலன்ஷி.

“எல்லாருமே எப்படி இவ்வளவு தலைமுடியை வைச்சுட்டுச் சமாளிக்கிறீங்கனு கேக்குறாங்க. அம்மா எனக்கு ஜடை பின்னி விடுறது, எண்ணெய் தேய்ச்சு விட்றதுனு உதவி பண்ணுவாங்க. மற்றபடி என் தலைமுடினால எதுவும் வித்தியாசமா எல்லாம் உணரலை.

நான் டேபிள் டென்னிஸ் தேசிய அளவுல விளையாடுவேன். ரொம்ப கேஷூவலா இருப்பேன். இப்போதைக்குப் படிப்புல கவனம் செலுத்தி, அதிலேயும் சாதிக்கணும்”, என்று கூறுகிறார் இந்தத் தலைமுடி இளவரசி!

Exit mobile version