ilakkiyainfo

உலகின் மிகப்பெரிய ‘துபாய் பிரேம்’ கின்னஸ் சாதனை பட்டியலில்…

உலகின் மிகப்­பெ­ரிய பிரே­மாக ‘துபாய் பிரேம்’ தெரிவு செய்­யப்­பட்டு கின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்­துள்­ளது .

துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்­வக வடி­வி­லான பிர­மாண்ட புகைப்­பட சட்­டம்­போல ‘துபாய் பிரேம்’ என்ற கட்­டு­மானம் அமைந்­துள்­ளது . இது 492 அடி உய­ரமும், 305 அடி அக­லமும் கொண்­ட­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்­பட சட்­டத்­திற்குள் துபாய் நகரம் இருப்­பது போல் தெரியும். இது இரும்பு தள­வா­டங்கள் மற்றும் கொங்­கிரீட் போன்­ற­வற்றால் முப்­ப­ரி­மாண பிர­தி­யெ­டுக்கும் முறையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­பு­றத்தில் தங்க­நிற உலோக தக­டு­களால் வேலைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இதன் உட்­புறம் மற்றும் மேற்­புறம் மூடப்­பட்டு குளி­ரூட்­டப்­பட்ட கண்­ணா­டி­களால் சூழப்­பட்ட நடை­மே­டையும், இரு­பு­றங்­களில் ‘லிப்ட்’ வச­தியும் செய்­யப்­பட்­டுள்­ளது .

8_Dubai-Frame-Tourஇதன் உச்­சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை ரசிக்க முடியும். இந்த துபாய் பிரேம் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் 1ஆம் திகதி திறக்­கப்­பட்­டது.

இதை ஒரே நேரத்தில் 200 பேர் பார்­வை­யி­டலாம். ‘துபாய் பிரேம்’ கட்­டு­மானம் போல் பிர­மாண்­ட­மான பிரேம் உலகில் வேறு எந்த இடங்­க­ளிலும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. எனவே உலகின் மிகப்­பெரிய பிரே­மாக ‘துபாய் பிரேம்’ தெரிவு செய்­யப்­பட்டு கின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்­துள்­ளது.

இது தொடர்பில் நடை­பெற்ற நிகழ்­வில் கின்னஸ் நிறு­வன அதி­காரி தலால் ஒமரால் துபாய் மாநகராட்சி பொது இயக்குநர் தாவூத் அல் ஹாஜிரியிடம் கின்னஸ் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.

Exit mobile version