வவுனியா குருமன்காட்டில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்தள்ளனர்.

முச்சக்கரவண்டிகள் இரண்டும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

குருமன்காட்டுப்பகுதியில் வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று மோதியதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மற்றுமோர் முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

IMG_2786இதன் காரணமாக ஒரு முச்சக்கரவண்டி தடம்புரண்டதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரும் முற்சக்கரவண்டியில் வந்த ஒருவரும் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

IMG_2796இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply