திருச்சி: கள்ளக்காதலை நேரில் பார்த்த மூதாட்டியை கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய சம்பவம் துறையூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளிகளை கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலையான மூதாட்டியின் பெயர் கண்ணம்மா என்பதாகும். இவர் திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஒசரப்பள்ளி காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நல்லுச்சாமி என்பவரின் மனைவியாவார்.

68 வயதாகும் கண்ணம்மா தனியாக வசித்து வந்தார்.

கடந்த 26ஆம் தேதி முதல் அவரைக் காணவில்லை என்று குடும்பத்தினர் தேடி வந்தனர். கண்ணம்மாவின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

நகைத்திருட்டு கும்பல் ஏதேனும் செய்து விட்டார்களா என்று தேடிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

விவசாய கிணற்றில் இருந்து கண்ணம்மாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்தது யாராக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கண்ணம்மா காணாமல் போன நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமால்குமரன் என்பவரின் மனைவி அமுதாவின் மீது போலீசின் பார்வை விழுந்தது.

காரணம், கண்ணம்மா காணாமல் போனது குறித்து, அவரது மகள் ரேணுகாவிடம் கூறியதே அமுதாதான். அவரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே, கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்.

நண்பரின் கணவருடன் உல்லாசம்

அமுதாவின் கணவர் திருமால்குமரனும் அவரது ஒரு மகனும் வெளிநாட்டில் இருக்கின்றனர்.

கணவரின் நண்பர் தமிழ்மாறன் என்பருடன் அமுதாவிற்கு தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். அமுதா வீட்டிற்கு தமிழ்மாறன் வந்து போவதை கண்ணம்மா பார்த்து விட்டார்.

கள்ளக்காதலை தெரிந்து கொண்ட கண்ணம்மா உறவினர்களிடமும் ஊர்காரர்களிடமும் தெரிவித்து விடுவாரோ என்று அஞ்சிய அமுதாவும் தமிழ்மாறனும் அவரை கொல்ல திட்டமிட்டனர்.கண்ணம்மா உறங்கிக்கொண்டிருந்த போது தலையணையை வைத்து முகத்தில் அழுத்தி கொன்றனர்.

உடலை கொண்டு போய் கிணற்றில் வீசி விட்டதாக போலீசில் கூறியுள்ளார்.

அமுதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ்மாறனையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளினர்.
அமுதாவின் ஒரு மகன் ஏற்கனவே மாயமாகிவிட்டார், அவர் தானாக மாயமானாரா அல்லது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து அவரும் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஒரு கள்ளக்காதல் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் துறையூரில் பரபரப்பாக பேசப்படுகிறது,
Share.
Leave A Reply