அயல் வீட்­டி­லி­ருந்த கோழியைத் திருடி வேறொரு இடத்­தில் விற்­பனை செய்யச் சென்ற இரு இளை­ஞர்கள் அங்­கி­ருந்த கைய­டக்கத் தொலை­பே­சியை திருடிச் சென்ற போது கைது செய்­யப்­பட்ட சம்­பவம் வாழைச்சேனையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மீரா­வோடைப் பகு­தியைச் சேர்ந்த இரு இளை­ஞர்கள் அவர்­களின் பக்­கத்து வீட்­டி­லி­ருந்த கோழியை திருடி அதனை விற்­பனை செய்­வ­தற்­காக ஓர் இடத்­துக்குச் சென்­றுள்­ளனர்.

குறித்த நபர்கள் கொண்டு வந்­தது கள­வா­டப்­பட்ட கோழி என்று தெரி­யா­தவர், கோழியை பெற்றுக் கொண்டு பணத்தை உள்ளே எடுக்கச் சென்­ற­போது அங்­கி­ருந்த கைத்­தொ­லை­பே­சியை குறித்த இரு இளை­ஞர்­களும் திரு­டி­யுள்­ளனர்.

இதனை அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்த சிலர் இரு­வ­ரையும் மடக்கிப்பிடித்து விசா­ரணை செய்­த­போது அவர்கள் கொண்டு வந்த கோழியும் திருடப்பட்டது என்பது தெரியவந்தது.

Share.
Leave A Reply