இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பிக்பொஸ் மூலம் மிகவும் பிரபலமான லொஸ்லியா இணைந்து நடிக்க இருக்கிறார்.

கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார்.
சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.
Harbhajan
இந்த படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங்.
அடுத்ததாக ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
 losliya

இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், பிக்பொஸ் மூலம் மிகவும் பிரபலமான லொஸ்லியா இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply