நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர் விசு. சிறுநீரக கோளாறு காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதற்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். இந்நிலையில், அவர் இன்று (22ந்தேதி) மாலை 5.35மணி அளவில் சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இவர், சம்சாரம் அது மின்சாரம், மன்னன், திருமதி இரு வெகுமதி, மணல் கயிறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.