கொரோனா-வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரம் இன்று பகுதியளவில் மீளவும் திறக்கப்பட்டுள்ளது.
இருவார கால தனிமைப்படு;த்தலுக்குப் பின்னர், இந்நகரம் மீளவும் திறக்கப்படுவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. பயணிகள் சனத்திரளாக வூஹான் ரயில் நிலையத்திற்கு வரும் காட்சிகள் புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
சீனாவின் ஹூபெய் மாநிலத்தின் தலைநகரமாக வூஹான் திகழ்கிறது. இங்கு ஐம்பதாயிரம் பேருக்கு கொரோனா-வைரஸ் தொற்றியது. ஹூபெய் மாநிலத்தில் குறைந்தபட்சம் மூவாயிரம் பேர் வரை கொவிட்-19 ஆட்கொல்லிக்குப் பலியாகியுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் அவதானித்தால், சுமார் ஆறு இலட்சம் பேருக்கு கொவிட்-19 தொற்றியிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. மொத்தமாக 28 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். இது ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த புள்ளிவிபரமாகும்.