இலங்கையில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி  4பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 21 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 125 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 251 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ஒருவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த நபர் தங்கியிருந்த மருதானை பகுதியிலுள்ள ஒரு வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.

1585119425-IDH-2கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி கொரோனாவால் இலங்கையில் பதிவான 4 ஆவது மரணமாக அது பதிவு செய்யப்பட்டுள்ளது. 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

 குறித்த நபர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்ட நியூமோனியா நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply