கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் நோயினால் உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. 10 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு வெளியான தகவல்களின்படி, உலகளாவிய ரீதியில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,000,168 ஆக அதிகரித்திருந்தது. இவர்களில் 51,354 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில்  210,191 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

இத்தாலியில்  கொரோனாவினால் நேற்று  760  பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,915 ஆக  அதிகரித்துள்ளது. அங்கு 115,242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது இவர்களில் 18,278 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

ஸ்பெய்னில் மேலும் 709 பேர் உயிரிழந்துள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, அங்கு பலியானோர் எண்ணிக்கை  10,096 ஆக அதிகரித்துள்ளது.  அந்நாட்டில் 110,238 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில்  19,259 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் நேற்று 6 புதிய மரணங்களும் 36 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன. அந்நாட்டில் மொத்தமாக 81,589 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இவர்களில் 3,318 பேர் இறந்துள்ளனர். அதேவேளை, 76,408 பேர் குணமடைந்துள்ளனர்.

ஈரானில் கொரோனா வைரஸினால் மேலும் 124  பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை  3,160  பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 50,568  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 14,656  பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 235,747  பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5620  பேர் இறந்துள்ளனர்.  10,324 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் கொரோனா வைரஸினால் 4,503 பேர் இறந்துள்ளனர். அங்கு 59,105 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 12,428 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் 2,921 பேர் இறந்துள்ளனர்.  33,718 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் 1,339 பேர் இறந்துள்ளனர். அங்கு 14,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 1,074 பேர் இறந்துள்ளனர். 84,264 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் 536 பேர் இறந்துள்ளனர். அங்கு 18,827 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவில் இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் 9,976  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 5,828 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply