கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சீனாவில் புதிதாக 108 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 108 பேரில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.
சீனாவின் புதிய வைரஸ் மையமாக ரஸ்ய எல்லையில் உள்ள அதன் நகரம் மாறும் ஆபத்து உருவாகியுள்ளது.
சீனா ரஸ்ய எல்லையிலுள்ள ஹெய்லோங்ஜியாங் மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவிலிருந்து ஹெய்லோங்ஜியாங் மாகாணத்திற்குள் நுழைந்தவர்களில் 48 பேரிற்கு நோய் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஸ்யாவிலிருந்து நுழைபவர்களால் கொரோன மீண்டும பரவுகின்றது என்ற தகவலை தொடர்ந்து ரஸ்ய எல்லையிலுள்ள சீன நகரங்கள் தங்களின் எல்லை கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.
கடுமையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளையும இந்த நகரங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
வெளியிலிருந்து வருபவர்கள் அனைவரும் 28 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்,மருத்துவ பரிசோதனைகளிற்கு தங்களை உட்படுத்திக்கொள்ளவேண்டும் என ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தின் தலைநகரம் உத்தரவிட்டுள்ளது.
வைரஸ் பரவத்தொடங்கியதை தொடர்ந்து தலைநகரமான சூய்வென்ஹே முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகின்றது,ரஸ்யாவிலிருந்து நகரிற்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நகரத்தில் வாழ்ந்த பலர் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் தலைமையில் உயர் அளவு கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
தங்கள் நாட்டில்மேற்கொள்ளப்பட்ட கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பெருந்தொற்றே இல்லை என்கிறது அந்நாடு.