நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்படையினரின் எண்ணிக்கை 275 வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஐ நெருங்கியுள்ளது.
இன்று (01) 9.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 25 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் இலங்கையில் கண்டறியப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்தது.
இதுவரை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று 9.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.
இதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் 526 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

