சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக மணமக்கள் குச்சியை கொண்டு மாலை மாற்றிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக நிச்சயக்கப்ட்ட திருமணங்கள் மிக எளிதாக நடத்தப்பட்டு வருகிறது.

மணமகள் ஊரடங்கால் வர முடியாத காரணத்தால் மணமகன் வீடியோ கால் மூலம் செல்போனுக்கு தாலிக் காட்டிய விநோதமான சம்பவங்களும் அரேங்கேறி உள்ளது.

அந்த வரிசையில் மும்பையை சேர்ந்த ஜோடியும் இடம்பெற்றுள்ளனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக அவர்கள் குச்சியை கொண்டு மாலை மாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

எளிமையாக நடைபெற்ற அந்த திருமணத்தில் அவர்கள் உறவினர்கள் உட்பட சிலர் மட்டுமே இருந்தனர்.

சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக அவர்கள் குச்சியை கொண்டு மாலை மாற்றியதும் தற்போது விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. சமூக இடைவெளி என்பதே ஒருவரை ஒருவர் தொடாமல் விலகி இருப்பது தான்.

ஆனால் அந்த வீடியோவில் இருவரும் ஒரே குச்சியை வைத்து மாலை மாற்றியதால் இதற்கு எதுக்கு சமூக இடைவெளி என்று விமர்சித்து வருகின்றனர்.திருமணத்தை அடுத்து வரும் நிகழ்ச்சியில் என்ன செ.ய்வார்கள் என கிண்டல் செய்து உள்ளனர்.

Share.
Leave A Reply