நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில், விமானப்படையைச் சேந்த ஒருவரும், ரஷ்யாவிலிருந்து வருகைதந்த மூவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 13 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களுள், 09 கடற்படையினரும்,  ரஷ்யாவில் இருந்து வருகைதந்த மூவரும், குவைத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குகின்றனர்.

இதனையடுத்து இன்று சனிக்கிழமை மாலை 9.30 மணி வரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1814 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 891 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதே வேளை தற்போதுவரை 912 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றும் வருவதுடன் 46 பேர் வைத்தியகண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply