இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குள் சட்டவிரோதமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகமாகவுள்ளதாக அந்தப் பிரிவின் பிரதம அதிகாரி சுடத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினர் கடும் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளபோதிலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இலங்கைக்குள் வருபவர்களில் ஒருவராவது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதனால் இலங்கைச் சமூகத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply