2021 ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நோர்வே நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெட் (Christian Tybring Gjedde) என்பவர் ட்ரம்பின் பெயரை பரிந்துரைக்கும் விண்ணப்பத்தை நோபல் குழுவினரிடம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவிலான மோதல்களை வெற்றிகரமாக தீர்த்தார் என்பதற்காக ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமெ அவர் தமது பரிந்துரையில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.