கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ‘இந்தி தெரியாது போடா’ எனும் வாசகம் அடங்கிய டி ஷர்ட்டை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், அது உண்மை இல்லை என்கிறது தினத்தந்தி செய்தி.
அது போலியான புகைப்படம் எனவும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடுப்பு மருந்து குறித்து ‘Vaccines are safe, and save lives. Love this shirt, thanks’ என்ற வாசகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மே 30, 2019-ஆம் ஆண்டு பதிவிட்ட புகைப்படம்தான் இது என்பதும் தெரியவந்துள்ளது என்கிறது அந்த செய்தி.
Vaccines are safe, and save lives. Love this shirt, thanks @GinettePT! #VaccinesCauseAdults pic.twitter.com/7TluU4E6VL
— Justin Trudeau (@JustinTrudeau) May 30, 2019
தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டது சமீபத்தில் வைரலாகியது.
2018இல் வேட்டி சட்டை அணிந்து, தமிழர்களோடு பொங்கல் கொண்டாடி ஏற்கனவே பல தமிழர்களின் அபிமானத்தை பெற்றவர் கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அப்போது பொங்கல் கொண்டாட்டப் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டிருந்தார்.