தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுப்பதெனவும், அதற்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிப்பதெனவும் நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தில் இன்று மாலை கூடிய தமிழ்க் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

மாவை சேனாதிராஜாவின் அழைப்பில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கலந்துகொண்டன.

உடனடியாகப் போராட்டங்கள் எதனையும் முன்னெடுப்பதில்லை எனவும், ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் முதலில் கோரிக்கைகளை முன்வைப்பது எனவும், அதற்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையைத் திட்டமிடுவதெனவும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version