பாடலொன்றுக்கு தனது ரோபோக்கள் நடனமாடும் காட்சி அடங்கிய வீடியோவொன்றை அமெரிக்காவின் பிரபல பொறியியல் மற்றும் ரோபோ தொழில்நுட்ப நிறுவனமான பொஸ்டன் டைமிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் தயாரித்த 4 ரோபோக்கள், ‘ டூ யூ லவ் மி?’ எனும் பாடலுக்கு நடனமாடியுள்ளன. கொண்டுவர்ஸ் எனும் இசைக்குழுவினால் 1962 ஆம் ஆண்டில் வெளியிட்ட பாடல் இது.
மனித சாயலிலான இரு ரோபோக்கள், நாயின் தோற்றம் கொண்ட ஸ்பொட் எனும் ரோபா, சக்கரங்களைக் கொண்ட ஹேண்டில் எனும் ரோபோ ஆகிய 4 ரோபோக்களே இவ்வாறு நடனமாடின.
ரோபோ தயாரிப்புக்குப் பிரசித்தி பெற்ற பொஸ்டன் டைனமிக்ஸ், 2020 ஆம் ஆண்டின் நிறைவையொட்டி மேற்படி வீடியோவை வெளியிட்டுள்ளது.
‘மகிழ்ச்சியானதாக அமையும் என நம்பும் புதிய ஆண்டின் பிறப்பைக் கொண்டாடுவதற்கு எமது நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்துள்ளனர்’ என பொஸ்டன் டைமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.