2020 ஆம் ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் மும்பையில் நடந்தது. இதில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி, மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் சென்றார்.
miss india runner up manya singh shares her inspirational story
இந்த போட்டியில், இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மன்யா சிங் என்பவர் பிடித்துள்ளார். இவரது தந்தையான ஓம் பிரகாஷ் என்பவர் ஆட்டோ டிரைவர் ஆவார்.
மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததற்கு பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் நிலையில், அவர் இந்த இடத்தில் வருவதற்கு என்னென்ன பிரச்சனைகளைத் தாண்டி சாதித்துள்ளார் என்பது குறித்த தகவலை, மிஸ் இந்தியாவின் இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதில், ‘எங்களது குடும்பம் வருமானமின்றி மிகவும் கஷ்டப்பட்டது. உணவு எதுவுமில்லாமல், உறக்கமும் இல்லாமல் இருந்துள்ளேன்.
வெளியே செல்லும் போது, வண்டிக்கு கொடுக்க பணம் கூட இல்லாமல், பல கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றுள்ளேன்.
குடும்ப சூழ்நிலை காரணமாக, பள்ளிக்கும் சரிவர என்னால் செய்ய முடியவில்லை. இதனால் சிறுவயது முதலே, நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.
ஓட்டல்களில் பாத்திரம் கழுவ சென்றுள்ளேன். இரவு நேரத்தில் கால் சென்டரில் வேலை பார்த்துள்ளேன்.
Voir cette publication sur Instagram
அப்படி கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எனது தேவைகளை பூர்த்தி செய்தேன். நான் டிகிரி படித்து முடிக்க, தாயிடம் இருந்த மில்லிகிராம் தங்கத்தை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தேர்வு கட்டணம் செலுத்தி தான் என்னால் தேர்ச்சி பெற முடிந்தது.
நான் பெரிய கனவு கண்டேன். அது தான் எனக்கு வெற்றியைத் தேடி தந்தது. மிஸ் இந்தியா போட்டியில் நான் இரண்டாம் இடம் பிடித்தது, எனது தாய் தந்தை மற்றும் சகோதரரை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்.
அதே போல, நீங்கள் உங்கள் கனவுகளுடன் உறுதியாக இருந்தால் இங்கு அனைத்தும் சாத்தியம் என்பதை உலகிற்கும் காட்டியுள்ளது’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதமே தான் மிஸ் இந்தியா போட்டியில் தேர்வானது குறித்த இன்ஸ்டா பதிவிலும், தனது உருக்கமான குடும்ப சூழ்நிலையை அவர் உருக்கமுடன் பதிவிட்டிருந்தார்.
இன்று, அதற்கான வெற்றியையும் பெற்று பலருக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார் மன்யா சிங்.