எகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு
Narmer என்ற அரசரின் ஆட்சிக்காலத்தில் இந்த மதுபான தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
அரசர் Narmer 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் ஆட்சி நடத்தியவர். எகிப்தின் முதல் பேரரசரும் அவரே. மேல் மற்றும் கீழ் எகிப்தை ஒன்றிணைத்தது இவரின் ஆட்சிக்காலத்தில் தான்.
!எகிப்து நாட்டில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலையை அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முக்கியமான தொல்பொருள் இடங்கள் கொண்ட நாடாக விளங்கும் எகிப்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழம் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன, கண்டறியப்பட்டும் வருகின்றன.
உலகின் மிகவும் தொன்மையான நாகரீகத்தை உள்ளடக்கிய எகிப்தில் இறந்தவர்களின் உடல்களை பிரத்யேக மண்பாண்டங்கள், பெட்டிகளில் அடைத்து பதப்படுத்தும் வழக்கம் இருந்துள்ளது.
புதையுண்ட மம்மிக்கள் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முந்தையது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கு பழங்காலத்திய பொருட்களை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் எகிப்தின் தெற்குப்பகுதியான North Abydos-ல் எகிப்து மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது மிகப்பெரிய மதுபான தொழிற்சாலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Narmer என்ற அரசரின் ஆட்சிக்காலத்தில் இந்த மதுபான தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
அரசர் Narmer 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் ஆட்சி நடத்தியவர். எகிப்தின் முதல் பேரரசரும் அவரே. மேல் மற்றும் கீழ் எகிப்தை ஒன்றிணைத்தது இவரின் ஆட்சிக்காலத்தில் தான்.
20-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே இங்கு மதுபான தொழிற்கூடம் உள்ளதாக பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்,
ஆனால் துல்லியமாக அது எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள மதுபான தொழிற்சாலையில் 2 வரிசைகளில் 40 மண்பாண்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும், இந்த இடமானது கல்லரை ஒன்றிற்கு அருகில் இருப்பதாகவும் எகிப்து சுற்றுலாத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கு பீர் தொழிற்சாலை இருந்திருப்பதாகவும், ஒரே நேரத்தில் 22,400 லிட்டர்கள் பீட் தயாரிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லரையில் அரச சடங்குகள் நடைபெறும் போது அங்குள்ளவர்களுக்கு மதுபானம் இங்கிருந்து சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிது நாட்களுக்கு முன்னதாக Alexandria என்ற பகுதியில் தங்க நாக்குடன் கூடிய 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஒன்று கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூறத்தக்கது.