ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    செய்திகள்

    ”பொத்துவில் – பொலிகண்டி வரையிலான பேரணி முஸ்லிம்களுக்கு எதிரானதாம்” எழுந்த புதிய சர்ச்சை!

    AdminBy AdminFebruary 14, 2021No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி முஸ்லீம் மக்களுக்கு எதிரான கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்பட்டதாக என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

    அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள உலமாகட்சி அலுவலகத்தில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (13) மாலை இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    மேலும் தனது கருத்தில்,

    பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தமிழ் முஸ்லீம் மக்களினால் திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. இந்த பேரணியில் சிலரால் முஸ்லீம்களுக்கு எதிராக வடக்கு கிழக்கினை இணைக்க வேண்டும் என்றும் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்பன கோரிக்கையாக முன்வைக்கப்பட்டன.

    இவ்விடயம் தெரியாமல் முஸ்லீம்களை ஆதரவளிக்க கூறிவிட்டு சிவ பூசையில் கரடி நுழைந்தது போன்று இவ்வாறு பேரணியில் சிலர் புகுந்து கோஷம் இட்டுவிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்கின்றார்.

    இவ்வாறு ரவூப் ஹக்கீம் கூறுவது புதிதல்ல. வழமையாக ஒன்றினை ஏற்பாடு செய்து விட்டு இவ்வாறு கெடுக்கப்பட்டு விட்டது என கூறுவார். அதாவது மடையனாகி விட்டோம்.படுகுழியில் விழுந்து விட்டோம் என கூறுவது வழமையானதொன்று.

    இவ்வாறான பேரணி நடாத்தப்படுகின்ற போது யார் நடத்துகின்றார்கள் இதன் நோக்கம் என்ன என்ன விடயத்திற்காக முன்னெடுக்கப்படுகின்றது முஸ்லீம் சமூகத்தின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாம் ஆராயந்த பின்னர் முஸ்லீம்களை கலந்து கொள்ள சொல்லிருக்க முடியும்.

    ஆனால் இறுதியாக தங்களது கண்களை தங்களது கைகளால் குத்திக்கொண்டதாகவே நாம் பாரக்கின்றோம். அத்துடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லீம் கட்சிகளை பற்றி பொதுமக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள். இது உண்மை.

    இதற்கு காரணங்களை கூற முடியும். அதாவது யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவு தூபி உடைக்கப்பட்டதற்கு எதிராக ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு முஸ்லீம் மக்களை கேட்டனர். ஆனால் மக்கள் ஆதரவளிக்கவில்லை. அடுத்ததாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் முஸ்லீம் மக்களை கலந்து கொள்ளுமாறு இவ்விரு கட்சிகளும் கோரி இருந்தன.

    ஆனால் இப்பேரணியில் குறித்த கட்சிகளின் தலைவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் தான் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தார்கள். இதன் மூலம் முஸ்லீம் கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குகளை இழந்து வருகின்றன என்பது தான் உண்மையாகும்.

    அதுமாத்திரமன்றி இவ்விரு கட்சிகளும் நேரான கொள்கைகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இதில் சிலர் அரசாங்கத்தில் இருந்து கொண்டும் ஏனையோர் அரசாங்கத்திற்கு வெளியிலும் இருக்கின்ற முரண்பாடான நிலைமையினை நாம் காண்கின்றோம்.

    ஆகவே முஸ்லீம் கட்சிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் சுயநலமாகவே செயற்படுகின்றனர் என்பதை சமூகம் புரிந்து கொண்டுள்ளது. எங்களை பொறுத்தமட்டில் இந்த நாட்டில் முஸ்லீம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது தான் எமது கருத்தாகும்.

    ஆனால் இந்த ஒற்றுமையை சிதைத்தவர்கள் தமிழ் பேரினவாத அரசியல்வாதிகளும் முஸ்லீம் பேரினவாதிகளும் தான் காரணம் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

    அடிக்கடி தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமந்திரன் போன்றவர்கள் முஸ்லீம்கள் ஒன்றுபட வேண்டும் தமிழ் பேசும் மக்களாக இணைந்து செயற்பட வேண்டும் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினாலும் இதுவரை முஸ்லீம் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு குரல் கொடுத்துள்ளார்களா?தீர்த்துள்ளார்களா? என்பதை பார்க்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோருக்காக பேரணிகளை நடாத்துகின்றனர். ஊர்வலங்களை நடத்துகின்றார்கள்.

    மாநாடுகளை நடத்துகின்றார்கள். ஆனால் விடுதலை புலிகள் உட்பட கூட்டமைப்பில் உள்ள கட்சிகளால் அதாவது ஆயுதம் தாங்கிய இயக்கங்களாக இருந்த காலங்களில் இவர்களினால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு என்ன நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்கள் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.

    அதுமாத்திரமன்றி அவ்வாறு கடத்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்களை அழைத்து ஏதாவது செய்துள்ளார்களா?அதுவும் இல்லை. வெறுமனே தங்களுக்கு இசைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என கூறுவதும் தங்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனமாக இருப்பதனால் எவ்வாறு தமிழ் முஸ்லீம் உறவினை ஏற்படுத்த முடியும் என கேட்க விரும்புகின்றேன்.

    எனவே தான் சகலருக்கும் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். இயக்கங்கள் மற்றும் விடுதலை புலிகளினால் கடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு நியாயங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு நியாயமாக செயற்படுகின்றது என்ற கருத்து வெளியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Post Views: 10

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.

    March 30, 2023

    உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி

    March 30, 2023

    வட்ஸ் அப் காதல் ; சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபருக்கு வலை வீச்சு

    March 29, 2023

    Leave A Reply Cancel Reply

    February 2021
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    « Jan   Mar »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version