ilakkiyainfo

உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்ட மஞ்சள் நிற பென்குயின்

உலகிலேயே முதன்முறையாக மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டறியப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா அருகில் உள்ள தெற்கு  ஜோர்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் யவ்ஸ் ஆடம்ஸ் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் ஒன்றைக் கண்டுள்ளார். அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள எம்பரர் பென்குயின் ஒன்றும் உலா வருவதைக் கண்ட அவர் இரண்டையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஏனைய உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப் போல முதன்முதலாக பென்குயினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனித்துவமான இந்த பறவை இதுவரை கண்டுபிடிக்கப்படாத முதல் மஞ்சள் மற்றும் வெள்ளை கிங் பென்குயின் என்று நம்பப்படுகிறது.

Exit mobile version