கிளிநொச்சி- தர்ம்புரம் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 20 வயதான இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த விசுவமடு பகுதியை சேர்ந்த 20 வயது குணராஜா ஜெனோயன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கனரக இயந்திரத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்தில் பலியான இளைஞனின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.