பிரபலங்களில் சூர்யா-ஜோதிகா ஜோடி தான் அதிகம் கொண்டாடப்பட்டது.
அடுத்து அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா என பிரபலங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்கள்.
அடுத்தபடியாக சூப்பர் ஜோடிகளாக இணைந்துள்ளார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். காதலை உறுதிப்படுத்திய இவர்கள் அவ்வப்போது ஒன்றாக சுற்றி வருகிறார்கள்.
இவர்களை பார்த்தால் திருமணம் இப்போது இல்லை என்பது தெரிகிறது, அவரவர் வேலைகளில் செம பிஸியாக உள்ளார்கள்.
விசேஷ நாட்கள் வந்தால் இவர்களது ஜோடியான புகைப்படங்கள் வந்துவிடும்.
இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை பிறந்தநாளை கொண்டாடிய ஒரு பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Voir cette publication sur Instagram
உஜாலா விளம்பரத்தில் நயன் – இதை பார்த்துள்ளீர்களா? (வீடியோ)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் இது நயன்தாரா தான். சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் என்னவோ காதல் சம்பந்தப்பட்ட படங்களாக நடித்தார்.
படத்தில் காதல் காட்சிகள், நடனம், சில காமெடி என இப்படியே இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட நயன்தாரா நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் நடித்து அதில் வெற்றியும் கண்டார். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களும் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நேரத்தில் தான் நயன்தாரா நடித்த ஒரு விளம்பரத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
உஜாலா விளம்பரத்தில் நயன்தாரா நடித்திருக்கும் வீடியோ இதோ,
Voir cette publication sur Instagram