பிரபல நடிகை ஒருவர் புடவை கட்டிக்கொண்டு புல்லட் ஒட்டிய வீடியோ இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை பிரகதி கடந்த 1994ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதைத்தொடர்ந்து இவர் மருது, சிலம்பாட்டம் ,மார்க்கண்டேயன் ,எத்தன், சித்து பிளஸ் டூ ஆகிய பிரபலமான பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பிரகதி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளனர்.
அவர் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பிரகதி புடவை கட்டிக்கொண்டு கலக்கலாக புல்லட் ஓட்டிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அவரைப் பாராட்டியதோடு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Voir cette publication sur Instagram