ilakkiyainfo

11,200 கிராம் தங்கம் – அடேங்கப்பா… ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஹரி நாடார் வேட்புமனுத் தாக்கலில் கொடுத்திருந்த பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் கிலோ கணக்கில் நகை இருப்பதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வாகனங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் தனது பிரமாணப் பத்திரத்தில் அசையும், அசையா சொத்துகளின் விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்.

அதில் பல்வேறு நிறுவனப் பங்குகளில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாகவும், தனது வங்கிக் கணக்கில் 35 லட்சம் ரூபாய் இருப்பதாகவும், மற்றவர்களுக்கு 5.40 கோடி ரூபாய்க் கடனாக வழங்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அவரிடம் ஆறு வாகனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அவர் வைத்திருக்கும் ஆறு கார்களின் மொத்த மதிப்பு ஒரு கோடியைத் தாண்டும். அதில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும் அடக்கம்.

ஹரி நாடாரின் மொத்த சொத்து மதிப்பு 12.60 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சொத்து மதிப்பில் அவரின் வீடு மற்றும் நிலத்தின் மதிப்பு 11.50 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கையிருப்பாக 50,000 ரூபாய் இருப்பதாகத் தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.

தங்க நகைகள் அணிய மிகவும் பிடிக்கும் என்று கூறும் ஹரி, தனது பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் 11,200 கிராம் தங்க நகைகள் உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

அந்த நகைகளின் இன்றைய மதிப்பு 4.73 கோடி ரூபாய். தனது மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்குத் தங்கமாக மட்டும் வைத்திருக்கிறார்.

Exit mobile version