இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவரும், பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும், இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும், யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் புதிதாக 345 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் 300 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்!
இலங்கையில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று (20) இதுவரையில் 345 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,547 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.