ilakkiyainfo

விமானத்தில் குழந்தை பிரசவித்தால் என்ன நடக்கும்?

பறக்கும் விமானத்தில் கிட்டத்தட்ட 60குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்ற போதிலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரையில் வெளிவரவில்லை.

தாயாகும் பெண் ஒருவர் கனவு காணும் வகையில் விமானம் ஒரு பிரசவ அறையாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், சில சமயங்களில் விமானங்களில் பிரசவம் நிகழக்கூடும். கடந்த காலத்தில் சில பிரசவங்கள் விமானங்களில் இவ்வாறாக நிகழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.. இவ்வாறு விமானங்களில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள் விசேட பரிசில்களையும் சலுகைகளையும் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆகவே, இது தொடர்பில் ஆராய்வோம்.

1. விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவது தேவையானதா என்பதை விமானப் பணியாளர் தீர்மானிக்க வேண்டும்

பெரும்பாலான விமான நிறுவனங்கள், கர்ப்பிணிகள் எவ்வளவு தூரம் விமானத்தில் பயணிக்க வேண்டும் எனும் வரையறையை விதித்திருந்தாலும், எதிர்பாராத வகையில் சில பிரசவங்கள் நிகழவும் வாய்ப்பு உள்ளது. (வழமையாக 38வாரங்களுக்கு முன்பு அல்லது, மருத்துவரின் திகதியிடப்பட்ட குறிப்புடன் 30நாட்களுக்கு முன்பு)

விமானத்தில் பிரசவங்கள் அரிதாக நிகழ்ந்தாலும், அவ்வாறு பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்படும் பட்சத்தில், அப்பெண் பிரசவத்திற்கு தயாராக வேண்டும். இந்நிலையில், பிரசவத்தை பராமரித்து பார்வையிடுவதற்கு அதிகளவான வசதி வாய்ப்புகள் விமானப் பணியாளர்களிடம் இருக்காது.

முதலில் விமானப் பணிப்பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சி வழங்கப்படவில்லை. அந்த நேரத்தில் விமானத்தில் பிரசவம் நிகழும் பட்சத்தில் விமானத்தில் மருத்துவர் ஒருவரோ அல்லது தாதி ஒருவரோ இருப்பதாக ஒவ்வொருவரும் நம்புவார்கள்.

விமானத்தில் மருத்துவ பணியாளர்கள் எவரும் இல்லையாயின், விமானப் பணிப்பெண்கள் தாதி உத்தியோகத்தர் போன்று செயற்பட்டு சிசுவை பிரசவிக்கச் செய்வார்கள். அத்தோடு, விமானத்தை அவசரமாக தரையிறக்க வழி இல்லை என்றால், இது இவ்வாறு நிகழக்கூடும். இதேவேளை விமானமும் தனது பயணத்தை தொடரும்.

2. இவ்வாறு பிரசவிக்கப்படும் குழந்தையின் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கான எந்தவொரு விதிமுறையும் இல்லை

இவ்வாறு விமானத்தில் பிரசவிக்கப்படும் குழந்தைகளுக்கு குடியுரிமை பெறுவதற்கான உரிய விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை எனும் போதும், விமான நிறுவனத்தை பொறுத்தும் விமானம் பறக்கும் பிரதேசத்தை பொறுத்தும் மாற்றங்கள் ஏற்படலாம். ஒன்று மட்டும் நிச்சயமானது. தாய் மற்றும் தந்தையின் அதே குடியுரிமையை குறித்த குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், ஏனைய இரு சாத்தியக்கூறுகள் உள்ளன. அவை என்னவெனில் விமானம் பதிவு செய்யப்பட்ட நாட்டின் குடியுரிமையை அல்லது, பிரசவம் இடம்பெற்றபோது விமானம் இருக்கும் நாட்டின் குடியுரிமையை குறித்த குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

உதாரணமாக, விமானம் பறந்துகொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவின் எந்தப் பகுதியிலாவது குழந்தை பிரசவிக்கப்பட்டிருந்தால், அக்குழந்தை உடனடியாக அமெரிக்க குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், பிரித்தானிய வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில் குழந்தையொன்று பிரசவிக்கப்படும் பட்சத்தில், அது பிரித்தானிய ஆவணங்களை பெற்றுக்கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

3. சில விமான நிறுவனங்கள், குழந்தைகளுக்கு இலவச விமானச்சீட்டுகளை வழங்கக்கூடும்

விமானங்களில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணிக்கும் வகையில் இலவச விமானச்சீட்டுகள் கிடைக்கக்கூடும் எனும் வதந்திகள் பரவுகின்றன. துரதிஷ்டவசமாக இது அனைவருக்கும் பொருந்தாது.

இவ்வாறான இலவச சலுகைகளை சில குழந்தைகளே அவர்களின் வாழ்நாளில் பெற்றுள்ளார்கள். Indian விமானத்தில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றும் Egyptair விமானத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்றுமே இவ்வாறான சலுகைகளை பெற்றுள்ளன.

Polar விமான நிறுவனம் , AirAsia, Asia Pacific விமான நிறுவனங்கள் அல்லது Airways மூலமாக மேற்கண்ட விமானங்களில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள் தங்களது 21வயது வரை இலவச விமானச்சீட்டுகளை பெற்றுள்ளார்கள். மேலும் கடந்த 2017ஆம் ஆண்டில் Spirit விமானத்தில் ஆண் குழுந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையும் அதன் பிறந்ததினத்தில் இலவச விமானச்சீட்டுகளை பெற்றுவந்தது.

4. விமானத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையை கௌரவிக்கும் முகமாக விமானத்திற்கு பெயர் மாற்றப்படலாம்

கடந்த 2019ஆம் ஆண்டில் JetBlue விமானம் மேலதிக பயணி ஒருவருடன் தரையிறங்கியது. ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் பறந்துகொண்டிருந்த இந்த விமானத்தில் ஆண் குழந்தை ஒன்றின் பிரசவத்திற்கு, மருத்துவ பணியாளர்களும் விமானப்பணியாளர்களும் தங்களது உதவிகளை வழங்கினார்கள். இந்நிலையில் குறித்த குழந்தையின் பிரசவத்திற்கு பின்னர் குறித்த விமானத்திற்கு ‘Born to Be Blue’ என்று புதியதொரு பெயரை இட்டார்கள்.

இவ்வாறான குழந்தைகளுக்கு விமான நிறுவனங்களிலிருந்து பரிசில்கள் கூட கிடைக்கக் கூடும். கடந்த 2018ஆம் ஆண்டில் Chick-fil-A விமானத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தை அதன் வாழ்நாள் வரைக்குமான உணவை பெற்றுக்கொள்ளவும், அதனது உரிய வயதில் வேலையை பெற்றுக்கொள்ளவும் உத்தரவாதமளிக்கப்பட்டாள்.

5. குழந்தையின் தேக ஆரோக்கியம் ஆபத்தில் இருக்கலாம்

குழந்தை ஒன்று பிரசவிக்கப்பட விமானம் ஏன் பொருத்தமான இடமில்லை ஏன் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. முதலில், காற்று அடர்த்தி குறைந்ததாக இருக்கும். இது குழந்தை சுவாசிப்பதற்கு கடினமானதாக இருக்கும்.

இரண்டாவதாக, விமானத்தில் பிரசவத்திற்கு உதவும் வகையில் மேலதிக தொழில்நுட்ப உபகரண வசதிகள் இல்லை. குறிப்பாக, புதிதாக பிரசவிக்கப்பட்ட குழந்தையின் காதுகள், காற்று அழுத்தம் காரணமாக சிக்கலை எதிர்நோக்க நேரிடும்.

விமானத்தில் குழந்தைகளின் பிரசவம் அரிதாக இருந்தபோதிலும், குழந்தையை பிரசவிக்கும் தாய் முடிந்தவரையில் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதற்கு விமானப் பணியாளர்கள் உதவி செய்வார்கள். விமானத்தின் முதலாவது வகுப்பு அல்லது வணிக வகுப்பு போன்றவற்றுக்கு தாய் அழைத்துச் செல்லப்படலாம்.

நீங்கள் எங்கு பிறந்தீர்கள்?, விமானத்தில் பிறந்த ஒருவரை உங்களுக்கு தெரியுமா?, இலவச விமானச்சீட்டுகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடிந்தால், நீங்கள் எந்த இடங்களுக்குச் செல்வீர்கள்?

Exit mobile version