Site icon ilakkiyainfo

இஸ்ரேலின் வான் தாக்குதலில் காசாவில் அல் ஜஸீரா அலுவலகம் அமைந்துள்ள கட்டடம் தரைமட்டம்

காசாவில் Associated Press மற்றும் அல் ஜஸீரா அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டடம் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், குறித்த இரு ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களும் தாக்குதலில் நிர்மூலமாகியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

குறித்த இரு ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களும் செயற்பட்டு வந்த 11 மாடி கட்டடத்தில் பல அலுவலகங்களும் குடியிருப்புகளும் இருந்துள்ளன.

இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலிலேயே கட்டடம் தரைமட்டமானதாக அல் ஜஸீரா செய்தி வௌியிட்டுள்ளது.

குறைந்தது மூன்று ஏவுகணைகள் கட்டடத்தைத் தாக்கிய பின்னரே கட்டம் சரிவடையத் தொடங்கியதாக நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்காவின் விசேட பிரதிநிதி இஸ்ரேலை சென்றடைந்துள்ளார்.

இவர் இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஐ.நா-வின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

தாக்குதல்களினால் 36 சிறுவர்கள் உள்ளிட்ட 137 பாலஸ்தீன பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் நடத்தப்படும் தாக்குதல்களில் 920-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 

Exit mobile version