நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்று தொடர்பில் மேலும் 46 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றினால் நேற்றைய தினம் எதுவித மரணங்களும் நாட்டில் இடம்பெறாத நிலையில் மே 17 முதல் ஜூன் 05 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 46 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 23 பேர் பெண்களும், 23 பேர் ஆண்களும் ஆவார்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொவிட்-19 தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1742 ஆக அதிகரித்துள்ளது.