ilakkiyainfo

39 இலட்சம் பேரின் உயிரை காவு கொண்ட கொரோனா!

கொரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,915,545 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,915,545 ஆக உள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 180,749,184 ஆக அதிகரித்துள்ளது.

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை அடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 180,749,184 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,915,545 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 165,402,804 பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 11,430,835 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 81,101 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,464,471 ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 618,684 ஆக உள்ளது.

இதேபோல், இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி, இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

முழுமையான தரவுகளை அறிய இங்கே  அழுத்தவும்: https://www.worldometers.info/coronavirus/

Exit mobile version