ilakkiyainfo

தாயையும் தந்தையையும் கொன்ற மகள்… நெஞ்சை பதற வைக்கும் உண்மை சம்பவம்…

கனடா நாட்டில் வாழ்ந்த வியட்நாம் நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டனர் தந்தையும் தாயும் பாதாள அறையில் சுடப்பட்டு கிடந்தனர். மகள் மேல் தளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை செய்தது யார்? இதன் பின்னால் உள்ள கதை என்ன? முழுமையாக காணலாம் வாருங்கள்.

 

கொலை சம்பவம்

2010 நவம்பர் மாதம் கனடாவின் டொரன்டோ மாகாணத்தையே கதிகலங்க வைக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது. கனடாவில் வாழும் வியட்நாமை சேர்ந்த ஒரு தம்பதி விட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

அவரது மகள் வீட்டின் மாடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளயடிக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் பலரை மிரள வைத்தது. இது வழக்கமான சம்பவமாக இருந்தாலும் இதன் பின் உள்ள உண்மை வெளியே வந்தவுடன் தான் பலரை இது மிரள வைத்தது.

ஜெனிஃபர் பேன்

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தம்பதி பிச் ஹா பேன் – ஹூய் ஹான் பேன் இவர்கள் இருவரும் கனடாவின் டொரன்டோ மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 1986ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு அவர்கள் ஜெனிஃபர் பன் என பெயரிடுகின்றனர்.

சிறு வயதிலிருந்த அந்த பெண் நன்றாக படிக்கும் பெண்ணாக இருக்கிறார். 4 வயதிலேயே பியானோ மற்றும் புல்லாங்குழல் ஆகிய கருவிகளில் மியூசிக் வாசிக்க கற்றுக்கொள்கிறார்.

பள்ளி ஆண்டு விழா

இப்படியாக வளரும் போது ஜெனிபருக்கு 15 வயதாகிறது. அதுவரை பள்ளியின் மிகச்சிறந்த மாணவி என ஒவ்வொரு ஆண்டும் இவர் பட்டம் பெறுவார்.

அதே போல ஒரு வருடம் பள்ளி ஆண்டு விழா வந்தது. இந்த முறையும் இவள் தான் அந்த விருதை பெறுவார் என பலர் எதிர்பார்த்தனர்.

ஏன் ஜெனிபர் மற்றும் அவரது பெற்றோர்கள் கூட அதை தான் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த விருது அதே பள்ளியில் படிக்கும் வேறு ஒரு மாணவனிற்கு சென்றுவிட்டது.

ஏமாற்றம்

இதனால் ஜெனிப்பர் மிகவும் மனதளவில் கஷ்டப்பட்டார். அதனால் ஜெனிபர் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் திணறினார்.

மனதளவில் பாதிக்கப்பட்டார் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். இதனால் அவர் படிப்பிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் திணறினார்.

இதனால் அவரது மதிப்பெண்கள் குறைந்தது. ஆனால் அதை அவர் தனது பெற்றோரிடம் சொல்ல விரும்பவில்லை. அதனால் அவர் பெற்ற மதிப்பெண்களை பெற்றோரிடம் போலியாக மாற்றி ஏமாற்றினார்.

​காதல்

அதன் பின்பு அவர் வாழ்வே தலைகீழாக மாறியது. அதுவரை நல்ல பிள்ளையாக இருந்த ஜெனிபர் அதன் பின்மோசமான பிள்ளையாக மாற துவங்கினார்.

தனது 16 வயதில் டேனியல் வாங் என்ற நபரை சந்தித்தார். அவரும் ஜெனிபரும் காதலில் விழுந்தனர்.

டேனியல் வாங் ஒரு சிறிய போதை பொருள் விற்பனையாளராக இருந்து வந்தார். அவ்வப்போது சட்ட விரோத செயல்கள் செய்வது தான் அவரது பிரதான வேலையாக இருந்தது. இந்நிலையில் ஜெனிப்பரும் அவரை காதலித்து வந்துள்ளார்.

டேனியல் வாங்

இவருக்குள்ளும் காதல் விவகாரம் ரகசியமாக இருந்துள்ளது. இதற்கிடையில் தன் மகளை சாதாரணமாக வளர்க்காமல் டிவி பார்க்க கூடாது,

வெளியில் செல்ல கூடாது, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என ஜெனிபரின் பெற்றோர் மிக கண்டிப்பாக அவரை வளர்த்துள்ளனர்.

இது ஜெனிபருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் ஜெனிபர் தன் பெற்றோரிடம் நல்லபிள்ளையாகவே நடிக்க விருப்பினார். அதை சரியாகவும் செய்தார். அதற்கு டேனியலும் உதவியுள்ளார்.

​திருட்டுத்தனம்

இந்நிலையில் ஜெனிபர் பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்துவிட்டார். இப்பொழுது ஜெனிபரின் திருட்டுத்தனம் அதிகமானது.

ஜெனிபர் கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ், ஒரு இடத்திற்கு சமூகசேவை செய்ய செல்கிறேன் என வீட்டில் பொய் சொல்லிவிட்டு டேனியலுடன் நேரம் செலவிட்டுள்ளார்.

அவர் படிக்கும் படிப்பு பார்மஸி படிப்பு என்பதால் ஒரு மருத்துவமனையில் சேவையில் இருப்பதாக பொய் சொல்லியுள்ளார்.

காதலனுடன் தவறான சேர்க்கை

இதற்கிடையில் கல்லூரியில் தான் தான் நன்றாக படிப்பதாகவும், சிறந்த மாணவி என்ற விருதை பெற்றிருப்பதாகவும் எல்லாவற்றையும் போலியாக தயார் செய்து தன் பெற்றோரிடம் காட்டி அவர்களை ஏமாற்றி வந்துள்ளார். அதே நேரத்தில் கல்லூரிக்கு செல்வதாக தன் காதலனுடன் சென்றார்.

​சந்தேகம்

இதற்கிடையில் தன் செலவுக்காக பணத்தை சம்பாதிக்க வீட்டிற்கு தெரியாமல் பியானோ சொல்லிக்கொடுப்பது, ஒரு ரெஸ்டாரென்டில் பணியாற்றுவது என சிறு சிறு வேலைகள் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தன் செலவுகளை சமாளிக்க துவங்கினர்.

இந்நிலையில் தான் தன் மகளின் நடவடிக்கை மீது திடீரென பெற்றோருக்கு சந்தேகம் வந்துள்ளது.

சோதனை

இதையடுத்து ஒருநாள் பெற்றோர்கள் அவர் சமூகசேவை செய்யும் மருத்துவமனைக்கு சென்று அங்கு தாங்களே காரில் டிராப் செய்வதாக கூறினார்.

இதனால் ஜெனிபர் பதற்றமடைந்தார். அவர் பதற்றமடைவதை பார்த்தும் பெற்றோருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து ஜெனிப்பரை காரில் கூட்டி சென்று அந்த மருத்துவமனை வாசிலில் விட்டனர். ஜெனிபர் அவர்களை ஏமாற்றுவதற்காக காரிலிருந்து இறங்கி மருத்துவமனைக்குள் சென்றார்.

அதிர்ச்சி

இருந்தாலும் ஜெனிப்பரின் பெற்றோருக்கு சந்தேகம் தீரவில்லை அந்த மருத்துவமனையின் சீருடையில் இருந்த செவிலியர் ஒருவரை கூப்பிட்டு தன் மகள்இங்கு தான் பணியாற்றுகிறாள் பெயர் ஜெனிபர் பான், உங்களுக்கு அவரை தெரியுமா? என விசாரித்துள்ளனர்.

அதற்கு அந்த செவிலியர் அப்படி பெயரில் யாரும் இங்கு பணியாற்றவில்லை என கூறினார். இதையடுத்து ஜெனிபரின் பெற்றோர் தன் மகள் ஏதோ மறைப்பதை உறுதி செய்தனர்.
​உண்மை வெளியானது

உடனடியாக அவர்கள் இருவரும் ஜெனிபரை பல்வேறு விதமாக கண்காணிக்க துவங்கினர். அவரது காரில் ஜிபிஎஸ் பொறுத்துவது என பல யுக்திகளை கையாண்டனர்.

அதன் விளைவாக தன் மகள் டேனியல் வாங் என்பவருடன் தொடர்பில்இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெனிபரின் பெற்றோர் டேனியல் குறித்து விசாரித்த போது அவர் ஒரு லோக்கல் ரவுடி என்பது தெரியவந்தது.

கோபம்

இதையடுத்து ஜெனிபரின் பெற்றோர் அவரை அழைத்து டேனியல் உடன் உள்ள தொடர்பை நிறுத்தும்படி கண்டித்துள்ளனர்.

இதனால் தனது நாடகம் எல்லாம் பெற்றோருக்கு தெரிந்து விட்டதாக ஜெனிபர் நினைத்தார். மேலும் ஜெனிபரை அவரது பெற்றோர்கள் டேனியலை சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனால் அவர் கோபமானார். கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார்.

பிரிவு

இறுதியாக டேனியலை ஒரு கட்டத்தில் பெற்றோருக்கு தெரியாமல் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்து கூறினார்.

ஆனால் அப்பொழுது டேனியல் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஜெனிபர் இனி வரமாட்டார் என நினைத்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இதை அறிந்ததும் ஜெனிபருக்கு தூக்கி வாரி போட்டது. தன் காதலன் தன்னை விட்டு பிரிந்ததற்கு தன் பெற்றோர் தான் காரணம் என ஜெனிபர் கருதினார்.

​திட்டம்

தன் பெற்றோர் இருப்பதால் தான் தன்னால் தன் காதலனுடன் வாழ முடியவில்லை. அதனால் அவர்களை கொலை செய்யலாம் என ஜெனிபர் முடிவு செய்தார்.

பின் தன் காதலன் டேனியலை அழைத்து தன் விருப்பதை கூறினார். அப்பொழுது இருவரும் சேர்ந்து ஜெனிபரின் பெற்றோரை அடியாட்களை வைத்து கொலை செய்து விட்டு திருட்டு நடந்து போல நாடகமாடலாம் என்றும், அதன் மூலம் இருவருக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் பணம் 5 லட்சம் டாலர் கிடைக்கும் என்றும், அதை வைத்து இருவரும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழலாம் எனவும் முடிவு செய்தனர்.

ரவுடிகள்

டேனியல் ஏற்கனவே போதை பொருள் கடத்தலில் இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி இரண்டு ரவுடிகளை ஏற்பாடு செய்து அவர்களை வைத்து ஜெனிபரின் வீட்டிற்குள் நுழைத்து அவரது பெற்றோர் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன் படி 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் இரு அடியாட்களும் ஜெனிபர் வீட்டிற்குகள் நுழைந்து அவர்களது பெற்றோரை ஒரு போர்வையில் மூடி பேஸ்மெண்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர்.

​கொலை

இதையடுத்து ஜெனிபர் அந்நாட்டு போலீசிற்கு போன் செய்தார். போலீசில் தன்னை மேல் மாடியில் கட்டி போட்டிருப்பதாகவும், தன் தந்தையையும் தாயையும் கீழே கூட்டி சென்றதாகவும் தனக்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும் அவர் போலீசார் சொன்னார். போலீசாரும் இதை பதிவு செய்துவிட்டு அவர் சொன்ன வீட்டிற்கு சென்றனர்.

​போலீஸ்

போலீசார் அங்கு சென்று பார்த்த போது பேஸ்மெண்டில் ஜெனிபரின் தாய் இறந்து கிடந்தார். தந்தைக்கு துப்பாக்கி குண்டு காயம் இருந்தும் உயிர் இருந்தது. ஜெனிபர் மாடியில் கட்டிப்போடப்பட்ட நிலையில் இருந்தார்.

ஜெனிபர் போனில் சொன்னது போலவே அங்கு நடந்திருந்தது. இந்த சம்பவத்தில் ஜெனிபரின் 53 வயது தாய் மரணமடைந்துவிட்டார். தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கோமாவில் மருத்துமவனையில் இருந்தார். மகள் மட்டுமே தப்பித்துள்ளார்.

​விசாரணை

இந்த செய்தி முதலில் வெளியான போது பலர் ஜெனிபரின் மீது பரிதாபப்பட்டனர். ஆனால் போலீசார் விசாரணை நடத்தும் போது பல குழப்பங்கள் இருந்தது.

ஜெனிபரின் கதைபடி திருடர் வந்துமே ஜெனிபரை கட்டிப்போட்டுவிட்டனர். போலீசார் வந்து பின்பு தான் கட்டை அவிழ்த்துவிட்டனர். அப்பொழுது எப்படி ஜெனிபரால் போலீசாருக்கு போன் செய்ய முடிந்தது என்ற சந்தேகம் எழுந்தது.

​சந்தேகம்

அது மட்டுமல்ல, வந்த திருடர்கள் கொள்ளயடித்து மட்டும் செல்லவில்லை கொலையும் செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

ஆனால் ஜெனிபரை அவர்கள் ஒரு கத்தியால் கூட கீறல் போடவில்லை, இது ஏன் என போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதனால் போலீசாருக்கு ஜெனிபரின் மீது சந்தேகம் வந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேல் அவரது பெற்றோர்கள்இறுதி சடங்கு நடந்த போது ஜெனிர் அவர்களுக்காக கண்ணீர் கூட வடிக்கவில்லை,அவர் வருத்தத்தில்இருப்பது போல முகத்தை வைத்திருந்தது கூட போலியாக தெரிந்தது.

​உண்மை

அதன் பின் போலீசார் ஜெனிபரை மூன்று முறை விசாரணை நடத்தினர் அதில் ஒவ்வொரு முறையும் ஜெனிபர் நடந்த சம்பவத்தை சொல்லும் போது அதில் மாற்றங்கள் இருந்து கொண்டேதான் இருந்தது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டே சென்றது, ஜெனிபரை தவிர வேறு யார் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுவில்லை இறுதியாக எப்படியோ ஜெனிபரின் வாயிலிருந்து உண்மையை கக்கவைத்துவிட்டனர் போலீசார்.

கைது

இறுதியாக இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஜெனிபருக்கும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் பரோலில் வரமுடியாத அளவில் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. ஜெனிபரின் தந்தை உயிர் பிழைத்து விட்டார்.
​சிறை

ஜெனிபர் தற்போது ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் டேனியல் வாங்கை தொடர்பு கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்பு தான் அவர் வெளி உலகிற்கு வரும் வாய்ப்பை பெறுவது குறித்து யோசிக்கவே முடியும். டேனியல் வாங்கும் அதே போல தான் அவராலும் தற்போது வெளியில் வர முடியாது.

தந்தையின் தனிமை

இந்த சம்பவத்தில் ஜெனிபரின் தந்தை தான் தற்போது உயிர் பிழைத்து தான் பெற்ற மகளாளேயே தன் மனைவியையும் பரிகொடுத்து தற்போது மகளும் உடன் இல்லாமல் உண்மையான தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இவரை தேற்ற கூட தற்போது யாரும் இல்லை.

 

Exit mobile version