Site icon ilakkiyainfo

‘நின்று அமர்ந்திருந்து ‘கள்’ அருந்த முடியாது’

வட மாகாணத்திலுள்ள சகல கள்ளுத் தவறணைகளையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நேற்று (02) முதல் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் தவறணைகளில் நின்றுகொண்டோ அல்லது அமர்ந்திருந்தவாறோ கள் அருந்த முடியாது என பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தவறணைகளிலும் போத்தல்களில் அடைத்தே கள்ளை விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா காரணமாக சகல கள்ளுத் தவறணைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் கள் விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்த அவர் மதுவரித் திணைக்களத்தினால் விசேட அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Exit mobile version