ilakkiyainfo

புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்

கோவில்கள் முழுமையாக திறக்க அனுமதிக்கப்பட்டதால் இன்று காலையிலேயே பெரும்பாலான கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடந்தன.
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மே மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு நோய் தொற்று சற்று தணிந்ததால் ஜூன் 7-ந்தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 5 தடவை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நோய் தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தளர்வுகள் அறிவிப்பதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2-ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் மேலும் புதிய தளர்வுகளை அறிவிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர்.

அதன்படி புதிய தளர்வுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து மே 10-ந்தேதியில் இருந்தே நிறுத்தப்பட்டு இருந்தது.

கடந்த மாதம் 21-ந்தேதி நோய் பாதிப்பு குறைவாக இருந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும் டவுன் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

28-ந்தேதி முதல் மேலும் 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தஞ்சாவூர்,

Exit mobile version