அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்துள்ளனர்.

 

அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, உடனடியாக  மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் 19  பேர் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் 15 பேரை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.