Site icon ilakkiyainfo

15 நாட்களில் இருவரது ஆணுறுப்பையும் அறுப்பேன், கி.வீரலட்சுமி மிரட்டல் வீடியோ..!

தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி.வீரலட்சுமிக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச படம் அனுப்பிய நபர்கள் மீது புகார்

வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச படம் அனுப்பிய நபர்களை சரணடைய சொல்லி வீரலட்சுமி கத்தியை காட்டி மிரட்டி வீடியோ வெளியிட்டு பிறப்புறுப்பு அறுக்கபடும் என எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர் கி.வீரலட்சுமி. சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த இவருக்கு கடந்த மார்ச் மாதம் வாட்சப் எண்ணிற்கு ஆபாச வீடியோக்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் மார்ச் மாதம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

உடனடியாக ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் அவனை தானே கண்டு பிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன் என சில தினங்கள் கழித்து வீடியோ பதிவு ஒன்றையும் சமூக வலைதளத்தில் வீரலட்சுமி வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து ஏபரல் மாதம் விமான நிலையம் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி ஆபாச படம் அனுப்பியவரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் தனது முகநூல் பக்கத்தில் ஆபாச வீடியோ வந்துள்ளது. இது குறித்து காவல் ஆணையரிடமும் புகார் கொடுத்து நடவடிக்கை இல்லை என்கிறார் வீரலட்சுமி.

தற்போது மீண்டும் ஒரு வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கத்தியை கையில் வைத்துக் கொண்டு ஆபாச படம் அனுப்பிய இருவரும் நீதிமன்றத்திலோ அல்லது காவல் நிலையத்திலோ சரணடைந்து விடுங்கள் இல்லையென்றால் என்னிடமோ எனது தொண்டர்களிடமோ சிக்கினால் உங்கள் ஆணுறுப்பு அறுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கிறார்.

 

தனக்கு அரசியல் பலம், படை பலம், பண பலம் அனைத்தும் இருப்பதால் நான் நீதிமன்றத்தில் பணம் செலவு செய்து நீதியை பெற்றுக் கொள்வேன், சாதாரண தமிழ்ப்பெண்ணுக்கு எப்படி நீதி கிடைக்கும், அவிழ்த்து போட்டு ஆடுவோர் புகார் கொடுத்தால் அமைச்சர் என்றாலும் கைது செய்கிறார்கள்.

தமிழ் பெண்ணின் மானம் என்றால் கேவலமாக போச்சா என்று கொதித்தெழுகிறார். மேலும் 15 நாட்களில் இருவரது ஆணுறுப்பையும் தான் அறுத்து எடுப்பதாகவும் வீர தீர செயல்களுக்கான தமிழக அரசு விருதை வழங்க வேண்டும், நடவடிக்கை எடுக்காதவர்களை யூனிபார்மை கழட்டி வீட்டிற்கு அனுப்பவும் கோரிக்கை வைக்கிறார்.

சாதாரணமாக கையில் கத்தியை வைத்து யாரேனும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை தற்போது அமைதி காத்து வருவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

Exit mobile version