ilakkiyainfo

VIDEO: ‘எங்களை காப்பாத்துங்க’!.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..!

அமெரிக்க ராணுவ வீரர்களை நோக்கி இளம்பெண் ஒருவர், தங்களை காப்பாற்றுமாறு கதறியழுத வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறிய 6 நாட்களில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர்.

தலைநகர் காபூலை கைப்பற்றியதும், அதிகாரப்பூர்வமாக தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

தற்போது ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதால், வேறு நாட்டுக்கு அகதிகளாக செல்வதைத் தவிர, வேறு வழியில்லை அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக நெஞ்சை உருக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், ஆப்கான் சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோவில், ‘உலகம் எங்களை கைவிட்டு விட்டது. எங்கள் இறப்பை உலகம் தடுக்கவில்லை. இங்கு நாங்கள் வாழ்ந்தோம் என்ற வரலாறும் மெதுவாக மறைந்துவிடும்’ என கண்ணீருடன் சிறுமி கூறும் வார்த்தைகள் நெஞ்சை உருக வைக்கின்றன.

இந்த வீடியோவை ஈரான் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பெண் பத்திரிக்கையாளரான மஷி அலினிஜாத் வெளியிட்டுள்ளார்.

தாலிபான்கள் வேகமாக பல நகரங்களை கைப்பற்றி வந்ததை அறிந்ததும், மக்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர். அப்போது அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த காபூல் விமான நிலையத்தின் வெளியே மக்கள் பலரும் காத்திருந்தனர்.

அப்போது இளம்பெண் ஒருவர், அமெரிக்க ராணுவ வீரர்களை நோக்கி, தங்களை காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க கெஞ்சினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது.

Exit mobile version