ஐயோ.. இந்த மீன் கிடைக்கிறது எல்லாம் ரொம்ப ‘RARE’ ஆச்சே..! ஓவர் நைட்டில் தலைகீழாய் மாறிய வாழ்க்கை.. இப்போ மனுஷன் கோடீஸ்வரர்..!
மீன்களால் ஒரே இரவில் ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, பால்கர் மாவட்டம் அருகே உள்ள மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் சந்திரகாந்த் டாரே.
மீன்பிடி தடை காலம் அமலில் இருந்ததால், நீண்ட நாள்களாக கடலுக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தடை காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.
கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே அவருக்கு அதிர்ஷடம் காத்திருந்துள்ளது. அவரது வலையில் அதிகளவிலான மீன்கள் சிக்கியுள்ளன.
இதைப் பார்த்த சந்திரகாந்த், உடனே வலையை மேலே இழுத்துள்ளார். அப்போது மீன்களை பார்த்து வியந்து போயுள்ளார். அவரது வலையில் சிக்கிய மீன்களில் 150 விலை உயர்ந்த ‘கோல் மீன்கள்’ இருந்துள்ளன.
இந்த மீன்கள் சுவையானது மட்டுமல்லாமல், பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அதனால் இந்த மீன்களை பல நாடுகளில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது. இதனால் இந்த மீன்களை ‘தங்க இதயம்’ கொண்ட மீன் என்ற அழைக்கின்றனர்.
இந்த நிலையில் கரைக்கு திரும்பியதும், கோல் மீன்கள் அனைத்தையும் சந்திரகாந்த் ஏலம் விட்டுள்ளார். அதில் சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே இரவில் மீனவர் சந்திரகாந்த் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.