அத்துடன் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இலங்கை பிரஜையென குறிப்பிட்டுள்ள நியுசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென்,  5 வருடங்களாக குறித்த நபர் எமது கண்காணிப்பிற்குள் அவதானிக்கப்பட்டார்.

கத்திக்குத்து தாக்குதலை ஆரம்பித்து 60 நிமிடங்களில் பொலிஸாரால் குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், ” இன்று நடந்த சம்பவம் மிகவும் வெறுக்கத்தக்கது,  அது தவறு” என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்தள்ளார்.

 

குறித்த நபர் 2011 ஒக்டோபரில் நியூசிலாந்திற்கு வந்து 2016 ல் தேசிய பாதுகாப்பில் ஆர்வமுள்ள நபராக மாறியுள்ளார்.

அவரது நடவடிக்கைகள் குறித்த சந்தேகத்தின் காரணமாக அவர் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான கண்காணிப்பில் இருந்தார் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.